குதிரை வால் போல் கூந்தல்

அவளின் கூந்தல் பந்தயத்தில் கலந்து கொண்டது
'குதிரை வால் போல் கூந்தல்' என்பது பந்தயத்தின் பெயர்.
அதுசமயம் பல வருஷம் அவமான சாயம்
பூசப்பட்ட கழுதைகள் கூட்டம் போட்டன.
'கழுதை வால் போல் கூந்தல்' என
பந்தய பெயர் மாற்றப்பட சபதம் எடுத்தன.
நீலவால் கழுதையும் அதற்கு துணையாய்,
ஒருதலை கழுதையும் அனுப்பப்பட்டன.
ஒருதலை நானும்
ஒளிந்த வண்ணம் கலந்து கொண்டேன்.
வாயு பகவான் வாயால் ஆசிர்வதித்து
பந்தயத்தை தொடங்கி வைக்க,
பிடுங்கி கொண்டு செல்ல துடித்த கூந்தல்கள்
எஜமானிகளின் மானம் காக்கும் பொருட்டு கட்டுப்பட்டன.
திடீரென என் கண்முன் அக்காட்சி !
அய்யகோ !!
என் குதிரை பின்னே
ஒரு மந்திரகோலை வாய்க்குள் கொண்டு,
ஒருதலை கழுதை
வாயு பகவானுடன் எதிர்போர் புரிந்தான்.
இவையேதும் அறியா என் குதிரை
கண் விரிய சிரித்து,
தன் கூந்தலை உற்சாகப்படுத்திய போதுதான் உணர்ந்தேன்.
என் குதிரை,
'எதையும் சாதிக்கும் சிரிப்பு' பட்டம் பெற்றவள் என்று.
அது பொய்யாகிவிடின் என் காதலும் பொய் ஆகிவிடுமல்லவே?
வாய் துப்பாக்கியில் உயிர்குண்டு செருகி சுட்டேன்.
நீலவால் கழுதை பக்கம் பார்வை குத்தி
ஒருதலை கழுதை சாய,
நானும் கீழே சாய்ந்தேன்
அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிய
என் கண்கள் மகிழ்ச்சியில் மூடின
மூட மனமில்லாமல்..

எழுதியவர் : நாமக்கல் பாரத் (29-Jan-16, 7:32 pm)
சேர்த்தது : Namakkal Bharath
பார்வை : 187

மேலே