கண்டேன் காதலை
காரணமின்றி சிரிக்கிறேன் கண்ணாளனே - என்
கண்முன் உன் உருவம் வந்து வந்து செல்லும்போது - என்
கரமது உன் கைகோர்க்க நினைக்கும் போதே,
கனவு இது நினைவல்ல என்றுணர்கிறேன்,
கனவது நினைவான பொழுதோ,
கண்ணாளனே கரைந்திடுவேன் முற்றிலுமாய் உன் உயிரினிலே,
என் மௌனத்தின் விளக்கங்கள் நீ தரும் போது,
எனையறியாது விண்ணில் பறக்கிறேன்,
என்னக்கான மணவாளனே,
உன் உரைக்கண்டு உறைந்து நிற்கிறேன்,
கண்களை கண்டேன், பேச மொழியற்றேன்,
குரலினை கேட்டேன், கேட்கும் இசை வெறுத்தேன்,
காதல் நீ கூறினாய் வாழ்வின் முழுமை கொண்டேன்,
கண்டேன் காதலினை,
கரைந்தேன் உன் உயிரினிலே,
காலமுழுதும் வாழ்வேன் உன் மடியினிலே !!!