பாராட்டிச் செல்லவோ குற்றாலம் பெண்ணே சென்று நீராடு

சாரல் இளம்தென்றல் சாற்றும்கா தல்வேதம்
நீரினின் வீழ்ச்சியில் நாதசுர ஓசைகேட்கும்
நின்றுபாராட் டிச்செல் லவோகுற்றா லம்பெண்ணே
சென்றுகொஞ்சம் நீராடிச் செல்

----இருவிகற்ப இன்னிசை வெண்பா

சாரல் இளம்தென்றல் சாற்றும்கா தல்வேதம்
நீரினின் வீழ்ச்சியில் நாதசுரம் --பாராய்நீ
நின்றுபாராட் டிச்செல் லவோகுற்றா லம்பெண்ணே
சென்றுகொஞ்சம் நீரா டடி

---இருவிகற்ப நேரிசை வெண்பா

சென்றுகொஞ்சம் நீராடிச் செல் ----செ செ ச வர்க்க மோனை

சென்றுகொஞ்சம் நீரா டடி ---செ ட ---வல்லின இன மோனை ( க ச ட த ப ற )
இங்கே ஏன் இப்படி ?
பாராய் நீ நீராடடி ----ஓசையில் இயைந்து ஒலிக்கிறது
சொல்லழகு பொருளழகுடன் ஓசையும் பெறின் யாப்புக் கவிதை சிறக்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-24, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே