Padmamaganvetri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Padmamaganvetri
இடம்:  Ramanathapuram
பிறந்த தேதி :  03-Jul-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  3

என்னைப் பற்றி...

i am civil engineer. working as lecture at polytechnic.

என் படைப்புகள்
Padmamaganvetri செய்திகள்
Padmamaganvetri - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 12:26 pm

சென்று சேராப் படிமம்
சென்று சேராப் படிமம் ஒன்று இன்று காலையில் என்னைத் தாக்கிற்று.
சவரம் முடித்து விரல் நுனிகள் செய் நேர்த்தியைத் தடவிக் கொண்டிருந்தபோது,
கண்ணாடிக்குள்ளிருந்து பாய்ந்தது போல் அந்தப் படிமம் என்னைத் தாக்கிற்று
அதன் சிடுக்கையும் பின்னல் அழகையும் பிடிக்க என்னிடம் மொழி இல்லை.
அந்தரத்தில் பாயும் ஒளியை அணைக்க முன்னுவதுபோல்
பாய்ந்து சரிகிறது என் மனம்.
அதைக் கூறத் தெரியாது போனால் அது என்னைக் கொன்று விடும்
அதைக் கூறத் தெரிந்துவிட்டால் காலத்தின் கோலம் என்னை அழிக்கும்
சென்றடையாப் படிமங்களைச் சென்றடையச் செய்வதும்
சென்றடையச் செய்த பின் தற்காத்துக் கொள்வதும்
கூடி வரவில்லை
எனக்கு

மேலும்

பதவிகள் கீழ்மட்டத்தை அடிமையாகப் பார்க்கிறது 22-Aug-2017 8:07 pm
Padmamaganvetri - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 12:22 pm

பொன்நிற நத்தைகளின் சிலிர்ப்பு

வானம் ரகசியங்களுக்குள் பிரிந்துகிடக்கின்றது
ஆகாயச் சுரங்கங்களில்
சூல் நிரம்பியிருக்கின்ற மேகங்கள்

காதலைப் பூரித்துக் கொண்டிருந்தாள்

மந்திரத்தறி பின்னுகின்ற மழையாகிறான்

தூவானம் சிதறுகிற உடலைத் துவட்டுகிறாள்

பொன்நிற நத்தைகள் ஊரும் அவன் கவிதைகள்...
அவளை அணைத்துக் கிடக்கின்றன

‘கவிதைகள்’ அவள் ‘உடலை’
கவிதை என்றே சொல்கின்றன
பின்னர் தமக்குத் தாமே
அவள் உடலில் புயலின் சீற்றமிருந்தது என்றும்...
மாசற்ற நதியின் பாடலெனவும்...
உருகுதலும் உறைதலுமான படிமங்களின்
பித்தாகியவள் எனவும்...
வர்ணிக்கத் தொடங்கியிருந்தன

வியாபகமாய் அவள் காதலைப் பூரித்துக் கொண்ட

மேலும்

நல்ல படைப்பு தோழரே! 22-Aug-2017 8:06 pm
Padmamaganvetri - Padmamaganvetri அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2017 11:39 am

  "இங்கேதான் இருக்கின்றார் ஆதலாலே 
இப்போதே வந்திடுவார்" என்று கூறி 

வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு 
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். 

இங்கில்லை; அடுத்த ஊர்தனிலு மில்லை; 
இரு மூன்று மாத வழித் தூரமுள்ள 

செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி 
சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்பதுண்டோ? 

செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் 
சிட்டுப்போல், தென்னையிலே ஊசலாடி 

எழுந்தோடும் கிள்ளைபோல் எனதுடம்பில் 
இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! 

வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப 
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் 

கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க 
கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள். 

தாய் வயிற்றினின்று வந்த மானின் கன்று 
தள்ளாடும்; விழும் எழும் பின்னிற்கும்; சாயும். 

தூய்வனசப் பூங்கோதை அவ்வாறானாள். 
தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் 

பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து 
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந்தன்னில் 

நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் 
நாவறளக் கத்துதல்போல் பேசலுற்றார். 

வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் 
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! 

நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா? 
நான் நினைக்கவில்லை என்று மகிழ்ச்சி கொண்டு 

திடமுடனே வஞ்சி வடிவுரைத்து நின்றாள். 
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் 

வடக்கென்றால் சாக்காடென்றேதான் அர்த்தம்! 
மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய்கன்தான். 

வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில் 
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை 

கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் 
கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் 

துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் 
துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? 

தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் 
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 

16. எந்நாளோ!
பாராது சென்ற பகல் இரவு நாழிகையின் 
ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் 

தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். 
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? 

கண்டவுடன்வாரி அணைத்துக் "கண்ணாட்டி" யென்று 
புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் 

அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ? 
என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? 

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் 
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு 

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி 
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? 





என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை 
இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? 

ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் 
யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" 

என்று பலவாறழுதாள். பின் அவ்விரவில் 
சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள். அப்புன்னைதனைக் 

கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத 
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் 

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக 
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் 

பொன்னுடம்பு நோகப் புடைக்க அவரைப் பிணித்த 
புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்தான்! 

தொட்ட போதெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, 
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் 

கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகைநான் 
ஒட்டுறவு கொண்டுவிட்டோ ம். தந்தை ஒரு பகைவன்! 

தாயும் அதற்கு மேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? 
நோயோ உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? 

சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! 
ஏதோ அறியேன் இனி.   

மேலும்

Padmamaganvetri - எண்ணம் (public)
13-Aug-2017 11:39 am

  "இங்கேதான் இருக்கின்றார் ஆதலாலே 
இப்போதே வந்திடுவார்" என்று கூறி 

வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு 
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். 

இங்கில்லை; அடுத்த ஊர்தனிலு மில்லை; 
இரு மூன்று மாத வழித் தூரமுள்ள 

செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி 
சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்பதுண்டோ? 

செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் 
சிட்டுப்போல், தென்னையிலே ஊசலாடி 

எழுந்தோடும் கிள்ளைபோல் எனதுடம்பில் 
இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! 

வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப 
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் 

கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க 
கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள். 

தாய் வயிற்றினின்று வந்த மானின் கன்று 
தள்ளாடும்; விழும் எழும் பின்னிற்கும்; சாயும். 

தூய்வனசப் பூங்கோதை அவ்வாறானாள். 
தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் 

பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து 
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந்தன்னில் 

நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் 
நாவறளக் கத்துதல்போல் பேசலுற்றார். 

வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் 
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! 

நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா? 
நான் நினைக்கவில்லை என்று மகிழ்ச்சி கொண்டு 

திடமுடனே வஞ்சி வடிவுரைத்து நின்றாள். 
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் 

வடக்கென்றால் சாக்காடென்றேதான் அர்த்தம்! 
மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய்கன்தான். 

வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில் 
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை 

கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் 
கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் 

துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் 
துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? 

தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் 
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 

16. எந்நாளோ!
பாராது சென்ற பகல் இரவு நாழிகையின் 
ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் 

தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். 
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? 

கண்டவுடன்வாரி அணைத்துக் "கண்ணாட்டி" யென்று 
புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் 

அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ? 
என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? 

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் 
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு 

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி 
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? 





என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை 
இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? 

ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் 
யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" 

என்று பலவாறழுதாள். பின் அவ்விரவில் 
சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள். அப்புன்னைதனைக் 

கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத 
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் 

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக 
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் 

பொன்னுடம்பு நோகப் புடைக்க அவரைப் பிணித்த 
புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்தான்! 

தொட்ட போதெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, 
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் 

கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகைநான் 
ஒட்டுறவு கொண்டுவிட்டோ ம். தந்தை ஒரு பகைவன்! 

தாயும் அதற்கு மேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? 
நோயோ உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? 

சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! 
ஏதோ அறியேன் இனி.   

மேலும்

Padmamaganvetri - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2017 12:26 pm

முழுமை
மண்ணிறக் கண்கள் என் பார்வையைக் கைப்பற்றுகின்றன
அடியற்று ஆழ்ந்த இக்கோளங்களின் உறைவிடமான முகத்தின்பால் ஈர்க்கப்பட்டு
கொஞ்சம் முன்சாய்கிறேன்
ஒரு சிறிய, அகன்ற மூக்கு இளைப்பால் விரிகிறது,
நிறைந்த உதடுகள் காற்றிற்காய்த் தவிக்கின்றன,
நான் உன்னை அருகே இழுக்கிறேன்,
இந்தக் கண்களில் கணங்கள் கடந்துபோவதைப் பார்க்கிறேன்
உன் அம்மாவின் அக்கறை, உன் அப்பாவின் கவலை,
ஒரு காதல் பார்வை, ஒருகணத் தொடுகை, நினைவுகள்
அங்கே
எழுதி இருக்கின்றன
உனது உடல் எப்பொழுதுமே இப்படியே நேர்த்தியாய் இருக்கும்போலும்
ஒவ்வொரு தசையும் நாரும் பதற்றம் கொண்டிருக்கின்றது
மெருகான உனதுரு சுருண்டு
காத்திருக்கிறது, தயாராய

மேலும்

Padmamaganvetri - Priya :-) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2014 9:18 am

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
"ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"

மேலும்

ஓட்டல் முதலாளி நட்டப்பட விரும்பவில்லை. நல்ல முடிவு. நன்று பிரியா அவர்களே 13-Jan-2014 11:37 am
Padmamaganvetri - Priya :-) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2014 9:22 am

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"

மேலும்

அப்படி தான் சில பேர் உள்ளனர் தோழரே :-) 20-Mar-2014 10:27 am
அப்போ..... வீட்டுக்கு எப்புடி?அதுவும் 20 நாளுக்கு ஒரு முறையா? ஹி..ஹி...ஹி... 14-Mar-2014 12:23 pm
ம்ம்ம்..... 22-Jan-2014 11:15 am
பையன் நல்லா வருவான் போங்கா... :) 21-Jan-2014 12:44 pm
Padmamaganvetri - Priya :-) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2014 11:58 am

உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?

கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது

என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?

மேலும்

நல்வரவிற்காக காத்திருக்கவும் தோழி. 21-Feb-2015 1:41 pm
இந்த நோய்க்கு விரைவில் மருந்து தரும் மருத்துவராக அவர் வருவார் ப்ரியா.........அழகிய காதல் வரிகள். 21-Jan-2015 4:25 pm
நிச்சயம் வருவான் தோழி அருமை.. 02-Jul-2014 6:36 pm
அதுவும் சரி தான். 27-Jun-2014 1:31 pm
Padmamaganvetri - abdul அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 8:07 pm

பிறக்கும் வரை தாய் வளர்க்கும் வரை  தந்தை இறக்கும் வரை நட்பு 

மேலும்

anna 12-Jul-2017 12:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

JEENATH ROJA

JEENATH ROJA

மதுரை
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
user photo

S PAVITHRA

திண்டுக்கல்
மேலே