காதல் நோய்

உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?

கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது

என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?

எழுதியவர் : Priya (27-Jun-14, 11:58 am)
Tanglish : kaadhal noy
பார்வை : 145

மேலே