காதலாக நீ
உன் விழி பேசும் கதையை
மொழியாகக் கொண்டவள்
என் இதழ் பேச மறந்தாலும்
மௌனமாய்க் கவி வரைவேன்...
விரல் பிடித்து எழுதுவதாய்
என் மனம் அணைத்து நீயும்
பயிற்றுவித்துப் போனாய்
பாமாலை எனக்கும்...
களமிறங்கினேன் உன் நினைவில்
கவி வடிக்க காகிதத்தில்...
மை தீர்ந்தும் - எந்தன்
கவி மழை ஓயவில்லை...
கண்ணெட்டும் தூரமெல்லாம்
காணாத காட்சியிலெல்லாம்
என் பார்வை தாவிக் குதித்து
உன்னைக் காண விளைகிறதே...
காதலை எனக்குள்
கற்றையாய் நிரப்பிவிட்டாய்...
ததும்பி வழிகின்றாய்
என் தமிழெல்லாம் நீயே..
காதலாக நீ...
கவிதையாக நான்...
காலமெல்லாம் உன்னைப் பாட
காத்திருப்பேன் நான்!..