காண வேண்டும் யவ்ம் நீயாகவே

விழிகள் உன்னைப்
பார்க்கத் துடிக்க
தூரம் என்னைத்
தண்டிக்கிறது...
உன்னைக் காண
காலத்தோடு - நான்
செய்யும் போராட்டம்
அறிந்ததுண்டா நீ...
மனக்குதிரை வேகத்தில்
காலத்தின் ஓட்டைகளில்
நுழைந்து உன்னை
நெருங்கத் துடிக்கிறேன்...
காலமோ என்னை
கண்கட்டு வித்தை
செய்வதாய் எண்ணி
காயம் செய்து போகிறது...
நியாயமா அன்பே...
நீ தந்த காதல்
நிஜங்களை விடுத்து
கற்பனையில் தொலைவது...
ஒரேயொரு முறை
என் கைவிரல் பிடித்திடு...
இதழ்களோடு பேசிவிடு...
இமைகளை மீட்டிவிடு...
வாழ்ந்த நாட்களினதும்
வாழும் நிமிடங்களினதும்
அர்த்தம் கூடிப்போகும் அன்பே
நீ அரவணைத்து போனால்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:41 pm)
பார்வை : 56

மேலே