விடைத்தாராமல் விடைபெற்றாய்

நீ அருகிருக்கையில்
நனைத்த மழைத்துளி ஈரம்
காயமலே இதயத்தில்!..
ஒரே நிமிடம் தந்து
நன்றாக உனதுருவை
கண்களில் நிரப்பிடச்சொன்னாய்!..
ஆறடி உயரத்தை
அறுபதே வினாடியில்
அளப்பதெங்ஙனம்?!..
இதில் நிரப்புவதெக்கணம்?!..
அதை மட்டும் உரைக்காமலே
விடைபெற்றுப்போனாய்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 2:13 pm)
பார்வை : 71

மேலே