சொல்லாத காதல்

சொல்லாத என் காதலின்
சொந்தக்காரனே - நான்
சொப்பனத்தில் மட்டும் - உன்
செவியினுள் ஓதுகிறேன்
சிந்தாமல் காதலை...

சந்தித்தோம் முன்னொரு நாள்...
சிந்தை நீ நிறைத்ததும் அந்நாள்...
சுந்தரன் நீ சிரித்தாய்...
சரிந்தேனுன் சுக நினைப்பால்...

சந்தங்கள் புதிதாய் உண்டானதில்
சங்கீதம் போன்று வாழ்வானது...
சாமத்திலும் எந்தன் கனவுகளில்
சாகவரம் பெற்றுன் நினைவோடுது...

சிந்தித்தேன் இரவு பகலாய் - நான்
சிக்கிய கதை சொல்ல உன்னிடம்...
செப்ப வந்த போதெல்லாம் அதனை
சங்கடம் சூழ்ந்தது இள மனதை...

சந்தர்ப்பங்கள் நழுவவிட்டதில்
சுலபமாக விதி வென்றுவிட்டது...
சகலதுமாய் நான் நினைத்த நீயே
சதியாகி பின் என்னைச் சுட்டதேன்...

சிந்தாத நாளில்லை கண்ணீர்
சிதைந்துபோன கனவை எண்ணி...
சொல்லாத காதலின் விளைவு
சாவின் விளிம்பில் நிறுத்திவிட்டது என்னை..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:49 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 276

மேலே