ஹைக்கூ அல்ல என் முழு நாவல் நீ
ண்ட கவிதைக்குள்
உன்னைச் சுருக்குவதே
பெரும் பாடாக இருக்க...
அதிலும் உன்னை சுருக்கி
மூன்றே வரியிலான - சிறு
ஹைக்கூவாக்க - எனக்கு
தெரியவே தெரியவில்லை...
என் மொத்தமுமாய்
மெத்தனமாயிருப்பவனே...
உன் காதலைப் பாட
நீளும் வரிகளே எனக்குப்
போதாமல் இருக்கையில்...
நம் காதலுக்குச் செய்யும்
அநியாயமாய்த் தெரிகிறது
மூன்றே வரியில் உன்னை
நிறுத்தற்புள்ளியிட்டு முடிப்பது!..