எனக்குள் நீ

மலரோடு உறங்கும்
மென் பனித்துளியாய் - என்
மனதோடு நீ...

வயதோடு விரியும்
வனப்பின் வடிவாய் - என்
விழியோடு நீ...

பூவோடு சுரக்கும்
அமுதத்தின் அசலாய் - என்
அதரத்தில் நீ...

வானோடு மின்னும்
வளர்பிறை வரவாய் - என்
வையகத்தில் நீ...

நாரோடு மணக்கும்
நந்தவனச் சாறாய் - என்
நாளங்களில் நீ...

ஆணோடு ஊறும்
ஆசையின் சுகமாய் - என்
அங்கத்தில் நீ...

பெண்ணுக்குள் மடியும்
பேராசைக் கனவாய் - என்
பந்தத்தில் நீ...

பகல்வானில் மறையும்
நிலவின் நிழலாய் - என்
நிஜத்தில் நீ...

நிறைமாதப் பெண்ணின்
சுகப் பிரசவமாய் - என்
நினைவுகளில் நீ...

கண்ணிமைக்குள் மூடி
உள்ளுக்குள் பொங்கும் - என்
கண்ணீர் நீ...

பூட்டிக் கிடந்தாலும்
புகையாக வெளிவரும் - என்
புன்னகை நீ...

வாட்டி வதைத்தாலும்
வரட்சிக்கு விடைதரும் - என்
வசந்தம் நீ...

தமிழ் கொண்ட உணர்வில்
உறவாகிப்போன - என்
கவிகளாய் நீ...

புத்தகம் நடுவில்
பூட்டிவைத்த மயிலிறகாய்
எனக்குள் நீ!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:52 pm)
Tanglish : enakkul nee
பார்வை : 56

மேலே