நீ என் மோட்சம்

ஜெயிக்கட்டும்; இல்லை
தோற்கட்டும்...
முடிவுகளில் இல்லை
எந்தன் காதல்...
காதலில் உள்ளது
எனக்கான வாழ்க்கை..
உனக்கான என் காதல்
என்றுமே சிரஞ்சீவியாய்!

அழகான என் நாட்கள்
நீ என்னில் நிறைந்தது முதல்
அர்த்தம் பெற்றது என் உலகம்
அன்பு கொண்ட உன் விழிகள்
என்னில் சங்கமித்த நேரம்..
நீ அழ வைத்தாலும் தாங்குவேன்
அங்கு வலியிலும் வடிவது
உன் மீதான காதலே!

ஓயாது பேசும் என் இதழ்கள்
அநியாயமாய் வெட்கப்படுவதோ
உன் அருகாமை தரும்
இன்ப அவஸ்தை அதிலே..
வாழ் நாளில் நான் கண்ட
இன்பங்கள் அத்தனையும்
ஒரு புள்ளியில் வந்து கூடி
கும்மாளம் போடுவது
விழித்திரையூடே - உன்
வருகைகள் கண்டதாலோ...

அடுக்கடுக்காய் காதல்
வார்த்தைகள் வேண்டமாட்டேன்,
அமைதியிழக்கும் எந்தன் உயிருக்கு
ஒற்றை வரி தந்து
அளித்துவிடு சாந்தி,
மோட்சத்தை மண்ணில் காண்பேன்,
உந்தன் வார்த்தை வழியே!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (23-Feb-16, 7:03 am)
Tanglish : nee en mootcham
பார்வை : 580

மேலே