மலரே மௌனமா

மலரே மௌனமா ?
மனதில் சோகமா ?
மன்னவன் ஏக்கமா ?
மயக்கத்தில் தீருமா ?

விழிதிறந்து பாரம்மா !
வியந்திடுவாய் நீயம்மா !
விரல்பிடித்தது யாரம்மா !
வாய்மொழிந்து கூறம்மா !

வானில் மிதக்கும் பெண்ணிலா !
வாழ்த்து மழையின் சாரலா !
விடிந்தும் தெளியா காதலா !
விழியில் அவரின் தேடலா !

கண்முன் காதலன் பூமுகம் !
கண்டதும் கன்னியோ தேன்சுகம் !
கவியால் என்மனம் களித்திடும் !
கனவிலும் நினைவிலும் நிலைபெறும் !

எழுதியவர் : ச.அருள் (23-Feb-16, 4:58 am)
பார்வை : 514

மேலே