நடமாடும் நதிகள் - பகுதி 5
முன்னுரை:
தனித்தனியாய் நடமாடும்
ஹைக்கூகளை இணைத்தால்
பிறக்கும் ஒரு கதை!
..
பயனின்றி பாயும்
நதிகளை இணைத்தல்
நாட்டின் வளத்திற்கு விதை !
..
நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்
- கருணா
*******************
நடமாடும் நதிகள்!
*******************
கவிகின்றது இருள் !
கூடு திரும்பும் பறவைகள் -
மரத்தில் பாம்பு !
..
கள்ளுண்ட வண்டு!
காய்ந்த மாடு - நொறுங்குகின்றன
கண்ணாடி வளையல்கள் !
..
ஆதாமின் குற்றத்திற்கு
நாட்டாமை தீர்ப்பு - கடன்
வாங்கி கல்யாணம்!
..
வறண்ட பூமியில்
விதியின் யுத்தம் - கண்ணீரில்
கரைகிறது கஞ்சி !
..
மேற்கு மலையோரம் !
மேய்கின்றன ஆடுகள் - தூரத்தில்
வருகிறான் வெட்டுபவன் !
..
வெட்டுப்பட்டது மின்சாரம்
வேலி தாண்டுகின்றன - இரவில்
வேங்கையான வெள்ளாடுகள் !
..
கையூட்டு ஓநாய்களுக்கு
சுரண்டிக் கொடுப்பதை - கவனிக்கும்
குட்டி சிரிக்கின்றது!
..
நடமாடும் நதிகள் !
புலம் பெயர்ந்த - ஊருக்குள்
சாலைகளில் படகுகள் !
..
புதையுண்ட நீர்நிலைகள்!
தாறுமாறாய் கட்டிடங்கள்- தடுமாறுகிறது
வழியின்றி தண்ணீர் !
..
அலைகின்ற நதிகள்
கடலில் கலக்கின்றன - இதோ
நதிகளின் முகத்துவாரம் !
..
பின்னுரை:
நீச்சலறியா என்னை
ஹைக்கூ நதியில் தள்ளிய
ஜின்னாவுக்கு நன்றி.
..
கற்றேனோ ..நீந்திக்
கடந்தேனோ கரைக்கு - மீண்டும்
வந்து விட்டேன் !! ****
...
நன்றிகளை உரித்தாக்குகிறேன்
திருவாளர்கள் கமல் காளிதாஸ் , முரளி
ஆண்டன்பெனி இவர்களுக்கும் !