எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது நண்பர் ஜின்னாவின்முயற்சியில் ஒரு ஹைக்கூ தொடர்...

                                                                           படித்ததில் பிடித்தது 

 நண்பர் ஜின்னாவின்முயற்சியில் ஒரு ஹைக்கூ தொடர் நமது தளத்தில் உலா வருவது குறித்து அனைத்து எழுத்துநண்பர்களும் ஆவலாக உள்ளார்கள். வலைத் தளத்தில் நான் வாசித்த எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் ஹைக்கூ பற்றிய சில எண்ணங்களை கீழே கொடுக்கிறேன்
.************************************ **************************************************** ********************************************ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒருஅனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்தியசம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்குஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.

அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள்மூலம்,

 
நள்ளிரவில் 
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது. 

உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியைவிவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள்விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்கவேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன்விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது,அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவுசாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம்,அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்குவீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை?அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியேசெல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனைபாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில்  எறியப்படும் சிறியகல் ஹைக்கூ. 
*********************************** ********************************************* *******************
ஹைக்கூ கவிதை எழுதுபவருக்கும் வாசிப்பவருக்குமிடையில் ஒரு எண்ணப்பரிமாற்றத்துக்கு வழி வகுக்கும். வரப் போகும் ஹைக்கூ தொடரில் எழுதப் போகும் நண்பர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

# ஜி ராஜன் 

பதிவு : ஜி ராஜன்
நாள் : 4-Feb-16, 7:50 pm

மேலே