நடமாடும் நதிகள் -8 சுஜய் ரகு

முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!
நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்
நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு
கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்
பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்
முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்
மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்
அலமாரி ஏறி
புல்லாங்குழல் வருடும்
சாளரக் காற்று
நேர்த்திக் கடன்
நதிக்கரை நடந்தேன்
மொட்டை மரங்கள்
பிறந்த ஊர்க்
குளத்தில் பார்த்தது
நிலவின் பிம்பம்
அந்தி இருளில்
பறவைகளின் வேகத்தில்
மிதி வண்டியும்
---சுஜய் ரகு -
------------------------------------------
நன்றி : தொடர் தொகுப்பாசிரியர் திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி