என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்
இப்போதெல்லாம்..
தனது கம்மிப் போய்விட்ட
குரலில் கையை ..
புருவங்களுக்கு மேல் தாழ்த்தி
கண்களை கொஞ்சம் சுருக்கியே
வருகிறவர்களை.. போகிறவர்களை..
காது மந்தமாகிப் போனதால் கழுத்தருகில்
வந்து பேசுகிறவர்களை..பார்த்து பேசுபவர் ,
லேசாக நடுங்கும் கைகளுடன்
செருமலுடன் ..தனிமைப் படுத்தப் பட்டுவிட்ட
பொருமலுடன் ..இருமலுடன்
சேர்ந்து வாடிக்கொண்டிருக்க ,
சிரிக்கும் எமனோ
ஒவ்வொரு முறையும் அருகில் வந்து
அகன்று சென்று விடுகிறான்..
ஆண்டுக்கு இருமுறையாவது ..
அந்த ..
முதியோர் இல்லத்தின்
முதியவர்..
பணக்கார பிள்ளையின்
தகப்பனாராம்!..
பகட்டான மருமகளின்
மாமனாராம்..!
பார்க்க வந்த பேரக் குழந்தைகள்
சொல்லிக்கொண்டிருந்தன..
யாரிடமோ!

