உண்மை
உண்மை அழுது கொண்டிருந்தது
அதன் விழிநீரை
பெருந்தாகம்கொண்டு
பருகுகிறது பொய்கள் கூடி.!
நிரபராதி சிறைக்குள் இருக்கவும்
குற்றவாளி விடுதலையாகவும்
சட்டம் அதன் கடமையைச் செய்யும்.!
உண்மை
அதன் உண்மையோடும்
பொய்
உண்மையின் சாயலோடும்
இருக்கிறது.!
சூதுகளால்
கவ்வப்பட்ட வாய்மை
அன்றும் இன்றும்
காயம் பட்டுக்கிடக்கிறது.!
ஏறிமிதித்து
முன்னேறிப்போனது
காந்தியின்
கடைசி ஊர்வலம்.!
வாய்மை வெல்லும் என
இன்னும்
நானும் நீங்களும்
நம்பியிருக்கிறோம்..!