எங்கள் இதயம் வாழும் உன்னத மாணிக்கமே

மண்ணில் வாழும் மக்களின்
மனமெல்லாம் நிறைந்து விட்டதென
விண்ணுலகம் காண சென்றீரோ!

நீங்கள் வித்திட்ட விதைகளும்
அவை வளர நீங்கள் அளித்த
எழுச்சி மிக்க கருத்துக்களும்
வேர்விட தொடங்கியதென எண்ணி
நிம்மதியாய் வேறுலகம் சென்றீரோ!

விண்ணை பற்றிய உம் அறிவியலும்
மண்ணின் மீதான நும் பாசமும்
மாணவர் மீதான உங்கள் நேசமும்
எழுச்சிமிக்க நும் எண்ணங்களும்
இனி நாங்கள் எங்கு காண்போம்!

தூங்கும் மனதை தட்டி எழுப்பி
நீர் பதியமிட்ட கருத்துக்கள்

பள்ளி சிறார்களிடம் வேரூன்றுகிறது
இளைஞர்களிடம் வளர்கிறது
மக்களிடம் பாதுகாக்கப்படுகிறது

கண்டிப்பாய் வல்லரசாய்
உங்கள் கனவு பூக்கள் மலரும்

அந்த வெற்றி மலர்களை நாங்கள்
உங்கள் முன் சமர்பிக்க உங்கள் ஆன்மா
ஆனந்தம் கொள்ளும் என்பதை நாங்களறிவோம்

வெற்றி பூக்களுக்கான நாள்நோக்கி
உங்கள் பாத சுவட்டை பின்பற்றி
வழி நடக்கிறோம், வழி நடத்துங்கள்
எங்கள் இதயம் வாழும் உன்னத மாணிக்கமே!

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினி சரண்யா (2-Aug-15, 1:14 pm)
பார்வை : 107

மேலே