இரவு மனிதனுக்கு இனிய உலகு

மேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு !
ஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்!!

உறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்!
உணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்!!

சோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்!
சேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்!!

ஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்!
ஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு!!
@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@
...கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : ...கவியாழினிசரண்யா ... (3-Jan-16, 11:29 am)
பார்வை : 206

மேலே