வானவில்

என்னே!
இயற்கையின் மாட்சி!
வியக்கிறேன்...!
உன்
எழுவகை நிறங்களும்
மனித இனத்தின்
ஏற்றத்தாழ்வுகளை
நினைவூட்டுகின்றன...!
நாடு,மொழி,இனம்
என்பனவற்றால்
துண்டாடப்படும்
சகோதரத்தின் சாயல்களை
எடுத்தியம்புகின்றன...!
வில் போன்று
வளைந்துள்ள
உன் வடிவம்
இதிகாச காலங்களில்
இராமனும்,இராவணனும்
இன்னும் பிற மன்னர்களும்
இப்படித்தான்
வில்லேந்தி
போரிட்டனரோ
என்றல்லவோ
எண்ணத்தூண்டுகின்றன...!
முன்னோர்கள் கடவுளை
ஒளிவுருவாய்
வணங்கினர்...
உன்னமைப்பும்
கடவுளின் மறுபக்கம்
போலன்றோ
காட்சித்தருகிறது...!
வசந்தத்தை வருவிக்கும்
தென்றலின் வருகை
போலும்... வியர்வையை
வருவிக்கும் ஆதவனின்
வருகை போலும்...
மழை வருவிக்கும்
அடையாளமாகன்றோ
நீ
வந்துப் போகிறாய்...!
எழுவகை வண்ணமாய்
பிளவுப்படும் உன்
தோற்றம்
இடத்தாற் தோய்ந்து
போகும் மானுட
எண்ணங்களின்
குறியீடோ?!...
வருத்திய வெய்யோனின்
வருகைக்கு
விடைக்கொடுத்து...
கருத்தினை வளப்படுத்தி
களைப்பினைத் துரத்தி...
என்
எழுதுகோலை
அசையச் செய்த
கவியின் அடையாளம்!!
சுருங்கச் சொன்னால்
உன் சிறப்பு
இயற்கையின்
மாட்சி!
இறைவனின் ஆட்சி!!
********************

எழுதியவர் : Daniel Naveenraj (3-Jan-16, 12:07 pm)
பார்வை : 153

மேலே