மாலைநேரத்து மயக்கம்
ஒவ்வொரு நாளும்.. இனிமையான நேரத்தை பரிசாக தருகிறது மாளைபொழுதாக!
மனம் மயங்கும்
அந்திபொழுது மட்டும்
சிக்கனமானதேன் ?
கூறுவாய் நாளே !
பொன் அந்தி மாலையே ...
உன்னிடம் மணத்தை பரிகொடுப்பாள்..
தவறாமல்
வெண்ணிற மல்லிகையே !
மாலையே மலர்ந்துவிடு
உனக்காக காத்திருக்கின்றன
எண்ணற்ற மலர்கள் !
பொன்னான மாலையே..
நாள் சூடும் வேளையே
சிறிய நேரம் ஏன் என்ற கேள்வியே ...
விடை கொடுப்பாய் நாளே நாளையே !
என் தனிமை
இனிமையானது
தமிழால் !