சிங்கத்தின் கர்ஜனை

கர்ஜியுங்கள்
கலப்படம் கலந்த
கயவர்களை காணும் போது !!

விரட்டி அடியுங்கள்
வேடம் தரித்த
மனிதர்களை !!!

வீரமாய்
செயல்படுங்கள்
தோல்வியை தழுவும் போது !!

தன்னம்பிக்கையோடு
நடையை தொடருங்கள்
இன்னல்களை தவிடு பொடியாக்க !

அமைதியாய் தோற்றமளித்தால்
அழித்து விடுவார்கள் !
ஆளுமையான தோற்றத்திற்கு
அடங்கி விடுவார்கள் !

இது தான் இன்றைய உலகம் !!

கர்ஜியுங்கள்
உங்கள் சுய ரூபத்தை வெளிபடுத்த !!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (7-Jun-14, 12:25 am)
பார்வை : 2385

மேலே