தேகம் தொட்ட பட்டம் - இராஜ்குமார்

தேகம் தொட்ட பட்டம்
====================
சரிந்துப் போகும் திடல்
எங்கோ ஓரலை தொட்ட
அவளின் கண்ணீரால்
ஈரமில்லா கரையானது
படகாய் மிதந்தது
பனித்துளி - உப்பு
காற்றை அவளின்
இதழாய் ஊதியபோது ..!!
மணலில் நுழைந்த
நண்டு அனைத்தும்
நடனம் கற்க வந்தது
மங்கையவள் மயங்கியப் போது ..!
யாரோ
தொலைத்தப் பட்டம்
அவள் தேகம் தொட்டதும்
கற்றது காதலை ..!
- இராஜ்குமார்
நாள் : 18 - 9 - 2011