வேண்டுமடி நீ எனக்கு

உன்னை பார்த்த பின்தான்
பூக்களை நேசிக்கத் தொடங்கினேன்!

உன்னுடன் பேசிய பிறகுதான்
குயில்களைப் பார்க்க விரும்பினேன்!

உனக்காகவே ஒவ்வொரு நாளும்
உறக்கத்தில் இருந்து எழுகிறேன்!

உன்னிடம் இருந்துதான் நான்
உயிர் மூச்சைப் பெறுகிறேன்!

உன்னோடு மட்டும்தான் எந்தன்
உறவு என்று எண்ணினேன்!

ஆனால் நீ..
என்னிடம் பேசவும்
என்னை நேசிக்கவும்
விரும்பவில்லை என்ற போது

பூக்களை கசக்குகின்றேன்..
குயில்களை விரட்டுகின்றேன்..
மீளா உறக்கத்தை நாடுகின்றேன்..
உயிர் மூச்சை வெறுக்கின்றேன் ..
உறவு அனைத்தும் மறக்கின்றேன்..

உன் மறு பரிசீலனைக்கு
மனுப் போட்டுக் காத்திருப்பேன்
மழை வரவே...
நம் காதல் மீண்டும் துளிர் விடவே!

எழுதியவர் : karuna (30-Sep-14, 9:05 am)
பார்வை : 255

மேலே