பிறந்தநாள் இரவு

பிறந்தநாள்...!
364 நாட்கள்
நெஞ்சுள் சிறைவைத்தவள்
தாயின் கருவறைக்குள்
தஞ்ச காலம் நிறைவுற்றவளாய்
தாவி உலகில்
தவழ்ந்த நாள்...
வாழ்த்த என்
நெஞ்சிழையில் ஓர் நப்பாசை...
நண்பனாகிப் போயிருந்தால்
நேர்முகத்தில்
நெஞ்சார வாழ்த்தி இருப்பேன்..
காதலனாய் போயிருந்தால்
11 மணி தொட்டு
மற்றவர் அழைப்போசை
அவள் செவி சேரா வண்ணம்
எங்கள் அழைபேசிகளுக்கு
INSOMANIA அளித்திருப்பேன்...
ஏதும் அற்ற
கல்லூரி அனாதைக்கு
தொடுதிரையில்
எண்பார்த்து சிலாகிக்கும்
எளியவன் வரமே கிட்டியது...
"HAPPY BIRTHDAY " ஒத்திகை நிகழ்வில்
என் பாட்டு எதிரொலியில்
'SIGMOND FREUD' களும்
கல்லறை தூக்கத்தில்
கண் அயர்ந்திருப்பார்கள்..
பட்டாம்பூச்சி மென் இறகுகள்
மேல் வயிற்றில் கீறலிட...
மெல்ல முடியாத
தண்ணீர் சுவையை
அன்றைய இரவில் தான்
மனிதனாய் உணர்ந்தேன்...
அழைப்பது சரியா
என்ற நடுவரில்லா பட்டிமன்றம்
இதயம், மூளையின்
போட்டிப் பேச்சுள்
ஆழ்மனதில் அரங்கதிர
விடை தெரியா என் மனதில்
மூளைச் சலவைகள்
மும்முரமாய் அரங்கேறின..
வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிந்த
இறுதி நிமிட
மணி துளிகளின்
டிக் டிக் உயிர்த்தடத்தில்
ரயில்மனமும் தடம் புரள...
எதுவாயினும் சரி என்று
என் வரிசைகளை
விரல் தீண்டி
திரைக்கு உயிர்கொடுத்து
வாழ்த்து ஒதிகைக்குள் நா குழற
அதே சமயம்
எதிர்திசையில் எமன்
DIGITAL குரலில் பேசினான்...
"நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் எண் SWITCH OFF செய்ய பட்டுள்ளது..." - JK

எழுதியவர் : (30-Sep-14, 7:58 am)
சேர்த்தது : JK
Tanglish : piranthanaal iravu
பார்வை : 54

மேலே