மண் - படைக்கவி

காறித் துப்பிய எச்சிலையும்
கழித்த மல சல கழிவுகளையும்
ஏந்திக் கொள்ளும் !
வெடி வைத்து தகர்த்தாலும் ,
வெட்டிக் குத்தி குழி பறித்தாலும் ,
கட்டிக் கட்டி கட்டிடமாய் தன்மேல் வைத்தாலும்
சுமக்கும் !
பயிர்களைத் தாங்கி
பலன் தரும் ,
மரங்களைத் தாங்கி
பழந்தரும் !
உயிரோடிருக்கும் வரை
மட்டுமல்ல ;
உயிர் நீங்கிய உடலையு மது
தாங்கிக் கொண்டுதானி ருக்கிறது ,
எல்லாவற்றையும்
தாங்கிக் கொண்டு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொக்காகி மகிழ்...
மெய்யன் நடராஜ்
05-Apr-2025

படம்...
இ க ஜெயபாலன்
05-Apr-2025
