காமராஜர்

தன்னி கரில்லா தமிழ னவர்
===தலைகள் வணங்கும் பெருந் தலைவரவர்
தென்னில முதித்த வேங்கை யவர்
===தெய்வத் திலுய்த்த மாமனி தரவர் !

கதராடை தரித்த கருந்த லையர்
-===காண்போர்க் கெளிய பெருந் தலைவர்
சுதந்திரப் போரில் சிறை சென்றவர்
===சுடரொளியாய் மக்கள் இடர் களைந்தவர் !

வறட்சியில் உணவுப் புரட்சி கண்டவர்
===வாடிய மனிதர்க்கு வழிவகை செய்தவர்
இறப்பிலும் இதயத்தை ஏழைக் கீந்தவர்
===இவர்போல் வேறு தலைவரும் பிறந்திலர் !

பள்ளிக் குழந்தைக்கு பாடம் சொன்னவர்
==="படிக்கா மேதை" தடம் பதித்தவர்
வள்ளலும் தோற்கும் உள்ளம் கொண்டவர்
===வாழ்வைப் பொதுப்பணிக் கர்ப்பணம் செய்தவர் !

மக்க ளாட்சிக்கு மன்னரைத் தந்தவர்
===மதிமிகு மந்திரி முதல்வ ரானவர்
கக்கனை கரம் வலதாகக் கொண்டவர்
===கர்ம வீரர் காமராசரே யவர் !

எழுதியவர் : தனராஜ் (14-Jul-14, 11:49 am)
பார்வை : 172

மேலே