இணையத் தமிழே இனி…… போட்டி கவிதை
கழனியில் உழன்ற தமிழன்
இன்று கணினியில் உலவுகிறான்
இணையத் தமிழே இனி
இவனின் விரலில் நீ வசப்பட்டதால்
ஐவகை நிலத்திலும் நிலைத்திட்ட உன்னை
ஐவிரல் ஐவிரல் கொண்டு அணைக்கிறான்
தமிழச்சி மடியில் பால்குடித்து தவழ்ந்தவன்
கணினி மடியில் தமிழ்பால் குடித்து தவழ்கிறான்
அன்று ஓலையில் கிறுக்கினான் வள்ளுவன்
நேற்று காகிதத்தில் கிறுக்கினான் பாரதி
இன்று கணினியில் கிறுக்கிறான்
இன்றைய வள்ளுவனும் நாளைய பாரதியும்
இணையத் தமிழே இனி
உன்னால் தமிழாழம் சென்றோம்
தமிழின் வேர்களை கண்டோம்
தமிழின்பம் கொண்டோம்
ஒற்றுமை ஓங்கிட
வேற்றுமை நீங்கிட
இணையத் தமிழே இனி
உன்னால் இணைந்திட்டோம்
செந்தமிழான தமிழ்மொழியே
என் தாய் தந்த வாய்மொழியே
இணைய வழி வந்தாயோ
இதய மொழி ஆனாயோ……..
இக்கவிதை என் சொந்த படைப்பு
பாரதி செல்வராஜ் (பாரதி )
அலைபேசி : 9003719285
குறிப்பு: i) ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2015
கவிதை போட்டிக்காக எழுதியது...
ii)இக்கவிதை ஆறுதல் பரசு பெற்றது....