சகனே சகனே
சகனே! சகனே!
தொத்தித் தொங்கும் வெண்ணிலவை
தத்தித் தாவி இழுத்து வந்து
பொத்திப் பொதிந்து ஒளித்து வைத்தேன்...
அந்தியில் நீ வரும் வேளையில்
பந்திப் பாய்விரித்து
நிலைமொழி நானாக
வருமொழி நீயாக
சந்திப் பிழையின்றி
இணைந்தே இன்புற...
வேற்றுமை உருபாகி உணர் பொருள் தருவாயோ ...?
இயல்பு திரிந்து விகாரம் ஆவாயோ ....?
ஓரெழுத்து ஒருமொழியாய்
என்னில் தனிமையை விதைப்பாயோ?
இல் பொருள் உவமையாய்
தவித்து நிற்கின்றேன்....
சகனே! சாகனே!
புணர்ச்சி விதி அறிந்து
அருகில் வா.
அசை சீர் தொடையாகி
உயிருடன் மெய் கலந்து
கவிதைகள் பிரசவிப்போம்...
இந்த பிபஞ்சம் நிறையட்டும் ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
