மழைக் கால நினைவுகள்

மழைக்கால நினைவுகள்...

வெட்டவெளி வானில்
முட்ட நிறைந்தன
கார்கால மேகங்கள்

கொட்டித் தீர்க்க காத்திருக்கும் வானம்
சொட்ட நனைய ஏங்கித்
தவிக்கும் மனம்

அன்பின் அதீரா....

எட்டியும் எட்டா தொலைவில்
தொடர்ந்து என்னை வந்திடு
பட்டும் படா பார்வையால்
ஊடுருவிக் கொன்றிடு

தொட்டும் தொடா விரல் நுனியால்
கட்டவிழத் துணிந்திடு
தட்டாது தட்டும் பாவத்தில்
தடையின்றி பின் தொடர்வேன்....

பட்டான என் தேகம்
பரிசல் கட்டி ஓடட்டும்
கட்டடங்கா உன் மோகச் சுழலில்
உழன்றேதான் மூழ்கட்டும்...
வெட வெடப்பான மழைக்காலம்
கத கதப்பாய் கடக்கட்டும் . ...

எழுதியவர் : வை. அமுதா (8-Mar-23, 12:42 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே