கவிதாயினி அமுதா பொற்கொடி- கருத்துகள்

வாழ்த்துக்கு நன்றி பழனி குமார்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அகன் அய்யா அவர்களுக்கு,
தங்கள் முயற்சியால் உருவாகும் "மீண்டும் அகரம்" அமைப்பிற்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

"ரசிகன் என்பவன் விருந்து உண்பவன்...நல்ல பதார்த்தங்களை ருசிப்பதும்..பிறருக்கு பரிந்துரை செய்வதும் அவன் பாணி.. சமையல்காரன் சமைத்து வைப்பதோடு சரி.. அன்றியும் சுவைஞன் தான் சமையல் காரனை பரிந்துரை செய்பவன்...இல்லையெனில் சமைத்த உணவு சமையற்கட்டிலேயே இருக்க வேண்டியதுதான்..."

மேற்கண்ட தங்களின் விமர்சனம் கண்டு பேரதிர்ச்சியுற்றேன்

நான் சென்னையில் உள்ள வண்ணையம் பகுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடிசை மாற்று வாரியப்பகுதியில் தொண்டு நோக்கத்தோடு பல இடையூறுகளுக்கு இடையே பள்ளி நடத்தி வருகின்றேன்.

நான் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தை சேர்ந்தவள் என்பதாலும் இன்னும் பல இடையூறுகளை சந்தித்து வருகிறேன். இதையெல்லாம் கண்டு துவண்டு போகும் சராசரிப்பெண் அல்ல நான்! பள்ளிப்பணி என் ஒரு கண் என்றால் எழுத்துப்பணி என் மறு கண்ணாகும்.

"எழுதுவது என்பது என் ஆத்மா திருப்தி அன்றி வயிற்றுப்பிளைப்புக்காக அல்ல!"

விமர்சனங்கள் எழுத்தாளர்களை வாழ வைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்துலகில் முதன் முதலில் நான் கால் ஊன்றிய போது தங்கள் இணைந்த கரவொளியால் என்னை மென்மேலும் வளர்த்தவர்கள் இதோ
1, Easwar thanikkaattu Raja
2, Muthu nadan
3, Mohanadas Gandhi
4, Pollachi abi
5, Rathi prabha
6, Sethu ramalingam
7, kavin saaral
8, Hari Hara Narayanan
9, Siva Balan
10, muraiyar
11, Suryapraba
12, ezhuthu Sooraavali
13, Dr.kanniappan
14, C.murugesan
15, seerkaazhi sabapathy மேலும் பல அன்பர்களால்தான்.
எழுத்துலகில் என்னை பெண்பாரதி என்றும் கவிதை வித்தகி என்றும் புகழ்ந்த போதும் நான் பெருமிதம் கொண்டதில்லை. ஒரு சிலர் என் கவிதை கண்டு சினந்த போதும் நான் பொங்கி எழவும் இல்லை.

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!"
என்று கீதையில் கண்ணன் உரைத்ததை சிரமேற்கொண்டு நடப்பவள் நான்.

சென்ற ஆண்டு காலம் சென்ற என் தந்தை கடைசியாக என்னிடம் கூறிய விருப்பம் என் கவிதைகள் அச்சேற வேண்டும் என்பதுதான். அவருடைய அன்புக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் என் கவிதைகளை அச்சிட முனைந்துள்ளேன்.
அன்பு, அடக்கம் , பொது நலம், என் குருதியில் கலந்த பண்புகள் இதை செவ்வனே ஊட்டியவர் என் தந்தை. அதனால் என் படைப்புகளும் அதையே பிரதிபலிக்கின்றன. என் படைப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தாங்கள் கூறியது போல் என் சமையலை யாரும் சுவைத்து பரிந்துரை செய்தால்தான் அது சமையல்கட்டை விட்டு வெளியே வரும் என்ற நிலை இல்லை. பொது நல நோக்கு கொண்டு அனைவருக்கும் விருந்தளித்தால் ஆயிரம் சுவைஞர்கள் என் முற்றம் வருவர். பசித்தவர் ருசிக்கட்டும் என் உணவை.

"அகன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது அல்ல! அவன் (இறைவன்) இன்றி ஓர் அணுவும் அசையாது."
"எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்."
இது கீதையின் வாக்கு. என்னுடைய இருபதாண்டு ஆசிரியர் பணியில் என்னை சுற்றி ஒரு அன்புக்கூட்டமே (மாணவர்கள்) உள்ளது.
அவர்களால் ரசிக்கவும் முடியும், சமைக்கவும் முடியும், சுவைக்கவும் முடியும். ஆதலால் நான் சமைத்த உணவு சமையல்கட்டிலேயே இருந்து விடும் என தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
ஒரு சமயத்தில் வள்ளுவன் திருக்குறளையே! நிராகரித்தது மதுரை தமிழ்ச்சங்கம். இதில் அமுதா அம்முவின் கவிதைகள் எம்மாத்திரம்.

"படைப்பின் மேலான ஒருவரின் விமர்சனம் குறித்து வேறு சிலர் வாசகர் நோக்கில் கருத்து கூறலாம்-கருத்துக்கள் படைப்பு மற்றும் விமர்சனத்தின் மீதே அமைதல் நன்று.அதை விட்டு விலகி பிற கருத்து பூச்சு பூசினால் சினம் தானே வரும்.சொரணை உள்ள எவருக்கும்.!"

என்று நண்பர் faizel அவர்களின் விமர்சனத்திற்கு பதில் கூறி இருந்ததைப்படித்தேன். அப்படி இருக்க தாங்கள் என் கவிதைக்கு விமர்சனம் கூறுவதை விட்டுவிட்டு சமயல்காரனையும் சுவைஞையும் உவமைகூறி தாங்கள் இன்றி என் கவிதை வெளியேற இயலாது என்பதை சிலேடையாக கூறி உள்ளீர்கள். இதைக்கண்டு மிகுந்த சினம்கொண்டு வருத்தமுற்றேன். இருந்த போதும்
"கீழோராயினும் தாழ உர"
"யாகவாராயினும் நாகாக்க" என்ற வள்ளுவனின் வாக்கு நினைவுக்கு வந்ததால் என் சினம் தணிந்தது!
பின்குறிப்பு: கனி உள்ள மரத்திற்க்குதான் கல்லெறி வரும்!
"மீண்டும் அகரம்" அமைப்புக்கு மீண்டும் அமுதா அம்முவின் வாழ்த்துக்கள்!

எழுத்துலகில் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தங்கள் கவிதையும் நல்ல தரமாக உள்ளது வாழ்த்துக்கள்

ஜார்ஜ் உன் எழுத்துக்கு நான் அடிமை . வரிகள் அனைத்தும் அணல் கக்குகின்றன....... உணர்ச்சிகளின் பிழம்போ நீங்கள்? இன்னு எழுத்து சிறக்க என் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.நான் நான்கு மாதத்திற்கு முன் தான் என் தந்தையை இழந்தேன்.அவர் மறைந்த அன்று நான் அழுகொண்டே எழுதிய கவிதை இது . நான் என் தந்தையின் ஒரே செல்ல மகள். அவர் குரல் கேட்காமல் என் நாள் நகராது . இன்று எங்கள் வீட்டு தொலை பேசி மௌனமாகி விட்டது .அவர் தூண்டுதலி பேரிலேயே நான் எழுத தொடங்கினேன் .

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கவிதையாக சமர்பித்துள்ளீர்கள். அனைத்தும் என் உள்ளத்தை நெகிழ வைத்தன . இது போன்ற கருத்து மிக்க கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

உங்கள் மனம் என்ன கற்பனையின் ஊற்றா இல்லை கவிதை தொழிட்சாலையா ? அத்தனயும் முத்துக்கள். புத்தகம் வெளியிட்டுள்ளீர்களா?

கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் .

கவிதைகள் அருமை எழுத்து சிறக்க வாழ்த்துக்கள்


கவிதாயினி அமுதா பொற்கொடி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே