தமிழர் நாம்

தமிழர் நாம் !
~~~~~~~~~~~~~~
அன்னம் விளைக்க ஏருழுவோம்
=== அனைவர் புசிக்கப் பயிரிடுவோம்
ஒன்றே குலமாய் யாமிருப்போம்
=== ஒற்றை வீட்டில் குடிவாழ்வோம்

மண்ணைத் தேடி வருவோரை
=== மனதைத் தொடவே அன்பேந்தி
திண்ணை நின்று வரவேற்போம்
=== திகட்டா தறுசுவை விருந்தளிப்போம்

புன்னை நிழலில் விளையாடி
=== புத்தகக் கதைகள் கலந்தாடி
சென்னல வாழ்வை தினம்வாழும்
=== சித்தர் வழிநாம் தமிழரென்போம் !

... மீ.மணிகண்டன்
#மணிமீ
10-Jan-2018

எழுதியவர் : மீ.மணிகண்டன் (11-Jan-18, 7:37 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 4296

மேலே