அஹமத் நஸீப் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அஹமத் நஸீப் |
இடம் | : மாவனெல்லா, ஸ்ரீ Lanka |
பிறந்த தேதி | : 26-Feb-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 9 |
முக நூல் : https://www.facebook.com/ahmnaseif
http://enkavivarihal.blogspot.com/
மறைந்த தாயை வரைந்து மட்டும் தான் பார்க்க முடியும்...
இருக்கும் தாயை இறுதிவரை இன்முகத்துடன் மட்டும் பாருங்கள்
இறைவனருளும் இணைந்துவிடும்…
குயிலுக்குக் கூவச் சொன்னது யார்?
மயிலுக்கு அகவச் சொன்னது யார்?
குரங்கிற்கு தாவச் சொன்னது யார்?
கொடும் புலிக்கு பாயச் சொன்னது யார்?
நாவிற்கு பேசச் சொன்னது யார்?
கண்ணிற்கு பார்க்கச் சொன்னது யார்?
இத்தனைக்கும் காரணம் கடவுளன்றி வேறு யார்?
உம்மைப் போற்றி கவிதை எழுத முனைந்தேன்
வர்ணிப்பதற்காய் வார்த்தைகளை சல்லடையில் இட்டேன்
வடிந்ததை மட்டும் எழுதவே பல விடியல்கள் ஆகுமே!
உமது அன்பை உலகிற்குக் காட்ட
சில சம்பவங்களைத் தேடினேன்
உம் சரித்திரத்தின் உரமே உம் அன்புதானே!
உமது அறிவாற்றலை அறிய முனைந்தேன்
அறியாமைக் கால ஆடு மேய்ப்பவராய் இருந்தும்
அனைத்திற்கும் வழங்கிய தீர்ப்புகள் ஆச்சரியமே!
உமது வீரத்தை பார்க்க ஆசைப்பட்டேன்
உம் வார்த்தைகளால் எதிரியின் கையிலிருந்த வாள்
உம் காலின் கீழ் வீழ்ந்தியதல்லவா வீரம்!
அவர் முஹம்மத் எனும் மனிதர்
முத்தென வாழ்ந்தவர்
அன்றே எமக்காய் கையேந்திட்டவர்
இன்றும் அவரை நெஞ்சில் சுமப்போர் பலர்…
உம்மைப் போற்றி கவிதை எழுத முனைந்தேன்
வர்ணிப்பதற்காய் வார்த்தைகளை சல்லடையில் இட்டேன்
வடிந்ததை மட்டும் எழுதவே பல விடியல்கள் ஆகுமே!
உமது அன்பை உலகிற்குக் காட்ட
சில சம்பவங்களைத் தேடினேன்
உம் சரித்திரத்தின் உரமே உம் அன்புதானே!
உமது அறிவாற்றலை அறிய முனைந்தேன்
அறியாமைக் கால ஆடு மேய்ப்பவராய் இருந்தும்
அனைத்திற்கும் வழங்கிய தீர்ப்புகள் ஆச்சரியமே!
உமது வீரத்தை பார்க்க ஆசைப்பட்டேன்
உம் வார்த்தைகளால் எதிரியின் கையிலிருந்த வாள்
உம் காலின் கீழ் வீழ்ந்தியதல்லவா வீரம்!
அவர் முஹம்மத் எனும் மனிதர்
முத்தென வாழ்ந்தவர்
அன்றே எமக்காய் கையேந்திட்டவர்
இன்றும் அவரை நெஞ்சில் சுமப்போர் பலர்…
தோல்விகண்டு தொய்வடைவது
தோற்றதில் முதல் தோல்வி
தோல்விக்கே தோல் கொடு
தொலைவிற்கது ஓடிவிடும்
விழுந்ததை நினைத்து வருந்தாதே
எழுவதை மட்டும் எண்ணத்தில் கொள்
அழுவது உன்னை அடங்கச் செய்யும்
எழுவது உன்னை ஆளச் செய்யும்
முற்தரைகளையும் புற்தரைகளாகப் பார்
முன்னே வெற்றிகள் முடிசூடும்
இருட்டென எண்ணி ஒழிந்திடதே
குருடர்களை ஒரு முறை மனதிற்கொள்
பயமென்ற அப் பீதி
எப் படைக்கும் படு தோல்வி
முடியும் எனும் அம் முயற்சி
முப்பொழுதும் உன் எழுச்சி
தோல்வி கண்டு தயங்காதே
மனமுடைந்து வருந்தாதே
குதித்தெழு குதிரையாய்
ஓடிச் செல் நீ வெல்வாய்
மங்கைகள் எல்லாம் கங்கைகள் அல்ல
கண்டவர் எல்லாம் கை வைத்திட
சங்கையாய் பார்த்திட வேண்டியவர்கள்
காதல் செய்து தாவிச் செல்ல
கன்னியர் ஒன்றும் கவிதைகள் அல்ல
என்றும் நெஞ்சில் சுமக்கும் வரிகள்
பெண்கள் அவர்கள் எம் கண்கள்
பாதுகாக்கும் இமைகளே ஆண்கள்
சிதைக்கும் காடையர்கள் அல்ல