காரணம் யார்
குயிலுக்குக் கூவச் சொன்னது யார்?
மயிலுக்கு அகவச் சொன்னது யார்?
குரங்கிற்கு தாவச் சொன்னது யார்?
கொடும் புலிக்கு பாயச் சொன்னது யார்?
நாவிற்கு பேசச் சொன்னது யார்?
கண்ணிற்கு பார்க்கச் சொன்னது யார்?
இத்தனைக்கும் காரணம் கடவுளன்றி வேறு யார்?