அவர் முஹம்மத் எனும் மனிதர்

உம்மைப் போற்றி கவிதை எழுத முனைந்தேன்
வர்ணிப்பதற்காய் வார்த்தைகளை சல்லடையில் இட்டேன்
வடிந்ததை மட்டும் எழுதவே பல விடியல்கள் ஆகுமே!

உமது அன்பை உலகிற்குக் காட்ட
சில சம்பவங்களைத் தேடினேன்
உம் சரித்திரத்தின் உரமே உம் அன்புதானே!

உமது அறிவாற்றலை அறிய முனைந்தேன்
அறியாமைக் கால ஆடு மேய்ப்பவராய் இருந்தும்
அனைத்திற்கும் வழங்கிய தீர்ப்புகள் ஆச்சரியமே!

உமது வீரத்தை பார்க்க ஆசைப்பட்டேன்
உம் வார்த்தைகளால் எதிரியின் கையிலிருந்த வாள்
உம் காலின் கீழ் வீழ்ந்தியதல்லவா வீரம்!

அவர் முஹம்மத் எனும் மனிதர்
முத்தென வாழ்ந்தவர்
அன்றே எமக்காய் கையேந்திட்டவர்
இன்றும் அவரை நெஞ்சில் சுமப்போர் பலர்…

எழுதியவர் : அஹமத் நஸீப் (12-Oct-17, 11:55 am)
பார்வை : 76

மேலே