உத்திரத்தில் தொங்குபவன்

உத்திரத்தில் தொங்குபவன் !

சுற்றி வர மக்கள் கூட்டம்
இருந்தும் ! சற்று முன்
அருகில் இருந்தவனை
கொலை செய்து உத்திரத்தில்
தொங்கவிடுகிறார்கள் பாகங்களாக !

அடுத்து நானோ?
உதவிக்கு கத்துகிறேன்

சுற்றி நிற்பவர்கள் சட்டை
செய்யவில்லை
உத்திரத்தில் தொங்குபவனை
கூறு போட்டு விலைக்கு
வாங்க ஆளாய் பறந்து
கொண்டிருக்கிறார்கள் !

எழுதியவர் : (12-Oct-17, 10:18 am)
பார்வை : 32
மேலே