பாரதி கிருஷ்ணா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாரதி கிருஷ்ணா
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  25-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2017
பார்த்தவர்கள்:  1107
புள்ளி:  115

என்னைப் பற்றி...

கதை,எழுத்து,கவிதைகள் மீது ஈடுபாடு உண்டு... மீசை கவிஞனை மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
பாரதி கிருஷ்ணா செய்திகள்
பாரதி கிருஷ்ணா - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2018 9:47 pm

நினைவகம் நிரம்பினால் தடுமாறும் கணினி போல்....

உன் நினைவுகள் என்னுள் நிரப்பட்டு.... தடுமாறுகிறேன் தினமும்...

என்ன செய்வதென்று தெரியாமல்

மேலும்

அருமை 17-Jan-2019 9:02 pm
சுகமான சுமை தான்...இன்னும் எழுதுங்கள் 17-Dec-2018 10:22 am
அருமை கணினியின் நினைவகம் நிரம்பினால் தடுமாறலாம் நெஞ்சில் அவள் நினைவகம் நிரம்பி வழிந்தால் கவிதைகள் பெருகி ஓடலாம் ...அதனால்தான் எழுத்தினர் நினைவகத்தை மிகப் பெரிதாக அமைத்திருக்கின்றனர் . 17-Dec-2018 9:39 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Dec-2014 12:05 am

ஒரு பறவையின் சிறகிலிருந்து
பறவைக்கே தெரியாமல்
பத்திரமாய் படியிறங்கியது
உதிர்ந்து போன
அந்த ஒற்றை இறகு

உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது

உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது

சுதந்திரம் என எண்ணி சுகமாக
காற்றில் மிதந்த இறகு
கடைசியாய் சேர்ந்த இடம் மலம்
மலம் என்றால் மனித கழிவு

மனந்தளராத இறகு
கழிவுகளோடும்
கனவுகளோடும் பயணப்பட்டது
கடலுக்கு

கடக்கும் வழியெல்லாம்
கலந்துக்கொண்டே இருந்தது
கழிவுகள்

தூரத்துச் சொந்தமாய் தொழிற்சாலைக் கழிவு
அடுத்தவீட்டுக் காரனாய் அணுக்களின் கழிவு
கடங்காரனாய்

மேலும்

தங்களின் வரிகளை இப்பொது வாசிக்க முடிந்ததை நினைத்து பெருமை படுகிறேன் மனித வாழ்க்கையை மருவி காட்டி உள்ளீர்கள். 17-Dec-2018 10:10 am
சிறப்பான சிந்தனை 04-Apr-2018 9:08 am
அருமை ... ஜின்னா 14-Oct-2017 7:43 am
அருமையான கவிதை 15-Oct-2016 3:46 pm
பாரதி கிருஷ்ணா - வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2018 7:07 pm

பிரம்மனவன் சிந்தையதை என்னவென்று சொல்வதடி
உன்னையவன் படைத்ததுதான் அதிசயத்தின் எல்லையடி
பிஞ்சுவிரல் தென்றலதன் மென்மையினைத் தருகிறதே
பிறந்தவுடன் மழலைமொழி மனம்முழுதும் வருடியதே

அஞ்சனங்கள் தேவையில்லை அழகுவிழி படைத்தவளே; நான்
கொஞ்சுகின்ற வரிகளெல்லாம் அன்பில்வரும் உளறல்களே
நெஞ்சமதில் நிலைக்கின்றாய்; நினைவுகளை விதைக்கின்றாய்;
மங்கையென மலர்ந்துஇன்று மயக்கங்கள் கொடுக்கின்றாய்

விஞ்சுகின்ற பிள்ளைகுணம் உன்னில் கண்ட விந்தையடி
விடுக்கென்று என்விரலும் கவிபுனைய விழையுதடி
என்னவென்று சொல்வதடி உன் பிள்ளைமுகம் யானறியேன்
இன்னனமே யானுணர்ந்த அத்தன

மேலும்

அருமை வரிகள் 17-Dec-2018 10:00 am
மாற்றிவிட்டேன் தோழரே. நன்றி 11-Dec-2018 10:49 pm
சரியாகச்சொன்னீர்கள் தோழி, என் வரிகளில் தான் 11-Dec-2018 10:44 pm
அருமை. ..அற்புதமே என்று மாற்றுங்கள். .தட்டச்சு பிழை வந்துள்ளது. ...மற்றபடி.அருமையான கற்பனை.சொட்ட சொட்ட வாழ்ந்துள்ளீர்கள் உங்கள் வரிகளில். .. 11-Dec-2018 9:43 pm
பாரதி கிருஷ்ணா - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2018 5:23 pm

கவிதை

காட்டருவி கொட்டிய சப்தத்திலும்
காட்டுவாசி தட்டிடும் பறையிலும்
ஈடில்லா இசையை
அள்ளித்தெளித்த ஆரமுதே...

சொல்லணா உணர்வுகளை
சொடுக்கிவிட்ட சொற்பதமே...
அழகியே...
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...

தனிமைச் சிறையில்
தவித்தவர்களை
ஆறத் தழுவிய அற்புதமே...

ஈரைந்து ஈன்றவள் போல்
சுகம் காண்கிறோம்
உன்னைத் தழுவிடும் நொடிகளில்...


பாரதி கிருஷ்ணா

மேலும்

உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... எனக்கு இது சரியாக புரியவில்லை சற்று விளக்குவீராக... 27-Feb-2019 5:40 pm
நன்றி தோழரே... 17-Dec-2018 9:55 am
உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... ----அருமை அருமை வித்தியாசமான வரையறை . 15-Dec-2018 7:16 pm
பாரதி கிருஷ்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2018 5:23 pm

கவிதை

காட்டருவி கொட்டிய சப்தத்திலும்
காட்டுவாசி தட்டிடும் பறையிலும்
ஈடில்லா இசையை
அள்ளித்தெளித்த ஆரமுதே...

சொல்லணா உணர்வுகளை
சொடுக்கிவிட்ட சொற்பதமே...
அழகியே...
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...

தனிமைச் சிறையில்
தவித்தவர்களை
ஆறத் தழுவிய அற்புதமே...

ஈரைந்து ஈன்றவள் போல்
சுகம் காண்கிறோம்
உன்னைத் தழுவிடும் நொடிகளில்...


பாரதி கிருஷ்ணா

மேலும்

உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... எனக்கு இது சரியாக புரியவில்லை சற்று விளக்குவீராக... 27-Feb-2019 5:40 pm
நன்றி தோழரே... 17-Dec-2018 9:55 am
உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... ----அருமை அருமை வித்தியாசமான வரையறை . 15-Dec-2018 7:16 pm
பாரதி கிருஷ்ணா - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2018 10:04 am

தொப்புள் கொடிதொடர்பில் நீஎனக்கு நித்தமும்
தப்பாமல் ஊட்டினாய் பத்தில் பிறந்தேன்நான்
மார்பமுது தன்னைப் பொழிந்து எனைவளர்த்தாய்
ஊர்புகழ என்னை உயர்த்திஆ ளாக்கினாய்
யார்நிகர் என்றுவந் தாய் !

----பஃறொடை வெண்பா

மேலும்

மிக்க நன்றி 15-Dec-2018 3:09 pm
மனமுவந்த கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பாரதி கிருஷ்ணா (அழகிய பெயர் ) 05-Oct-2018 6:52 pm
அம்மா வின் அன்பை சொல்ல ஈடில்லா வார்த்தைகள்... 05-Oct-2018 5:42 pm
பாரதி கிருஷ்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 12:47 pm

உன்னை பிரிந்த நொடி முதல்
சோகங்களால் நிறைகிறேன்
காலம் மாறினாலும்
காயம் மட்டும்
வடுகளாய் என் மனதில்
நம் காதலின்
நினைவு சின்னமாய்..

மேலும்

நன்றி...உங்கள் கருத்துக்கு அகம் மகிழ்ந்தேன் 10-Jan-2018 4:27 pm
என் கண்ணீருக்கு கூட ஓவியம் வரைய கற்றுக்கொடுத்த நீ என் வாழ்க்கையை மட்டும் எப்படி பாழாக்கி விட்டு போக மனம் வந்தது என்ற கேள்விக்குத்தான் மரணம் வரை விடை தெரியாமல் போகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 7:01 pm
பாரதி கிருஷ்ணா - பாரதி கிருஷ்ணா அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2018 12:19 pm

மங்கையின் விழிகளும், விரல்களும் தாமரையுடன் நீரில் உலவ தாமரை இலைகளும் சற்றே நெருங்கி வருகிறது அவளின்
தீண்டல் தந்த மயக்கத்தில்...

படைப்பு - மஞ்சுளா முருகையா...

மேலும்

பாரதி கிருஷ்ணா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
09-Jan-2018 12:19 pm

மங்கையின் விழிகளும், விரல்களும் தாமரையுடன் நீரில் உலவ தாமரை இலைகளும் சற்றே நெருங்கி வருகிறது அவளின்
தீண்டல் தந்த மயக்கத்தில்...

படைப்பு - மஞ்சுளா முருகையா...

மேலும்

பாரதி கிருஷ்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2018 11:48 am

சேரா மனம்...
கானா நொடி...
காதலில் இதயம்
அந்த
துடிப்பில் நீ...!
துன்பத்தில் நான்...
போராடும் குணம்
எனது...
போட்டியிடும் மனம்
உனது...
புரிந்துகொள்ள
துணியவில்லை...நீ
பிரிந்து செல்ல
முடியவில்லை...நான்
காத்திருக்கிறேன்
இந்த
கற்சிலைக்கும் காதல்
வரும் என்று...

மேலும்

நான் அழுகின்ற போது தான் என் கண்ணீரும் ஓவியன் ஆன ரகசியம் அறிகிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 7:58 pm
பாரதி கிருஷ்ணா - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2017 1:54 pm

வாழ்வின் எதார்த்தம்

இறக்கும் பொழுது
நேசிக்க
நினைக்கும்
அனைவரையும்
இருக்கும்பொழுது
நாம்
நேசிக்க
மறுக்கிறோம்...

மேலும்

உண்மைதான்...நன்றி 30-Sep-2017 5:59 pm
பல மனிதர்கள் வாழ்க்கையை ஏமாற்றிய வாழ்ந்து விட்டு போகிறார்கள் ஆனாலும் சிலர் சில நாட்கள் வாழ்ந்தாலும் முழுமையாக நிறைவு செய்கின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 5:45 pm
பாரதி கிருஷ்ணா - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2017 12:21 pm

வானவில்லில் தான் எத்தனை
வர்ணம் என்று அதிசயித்து பார்த்தேன்
அன்று...
நீயும் என்னிடம் எத்தனை
வர்ணமாய் மாறினாய்
இன்று...

என்றும்...
பத்மாவதி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
சஜா

சஜா

வவுனியா,இலங்கை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே