ஓர் கவிதையின் காதல்

கவிதை

காட்டருவி கொட்டிய சப்தத்திலும்
காட்டுவாசி தட்டிடும் பறையிலும்
ஈடில்லா இசையை
அள்ளித்தெளித்த ஆரமுதே...

சொல்லணா உணர்வுகளை
சொடுக்கிவிட்ட சொற்பதமே...
அழகியே...
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...

தனிமைச் சிறையில்
தவித்தவர்களை
ஆறத் தழுவிய அற்புதமே...

ஈரைந்து ஈன்றவள் போல்
சுகம் காண்கிறோம்
உன்னைத் தழுவிடும் நொடிகளில்...


பாரதி கிருஷ்ணா

எழுதியவர் : பாரதி கிருஷ்ணா (15-Dec-18, 5:23 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 1174

மேலே