புள்ளினங்கள்
பறந்து பறந்து
இறை தேடி வரும் இறைவா
உன் போல் வாழ வழி உண்டோ சொல்
தலையை ஆட்டி ஆட்டி
உன் போக்கில் போகிறாய்
யார்க்கும் வாய்க்குமோ இவுலகில்..!!
அழகு
உன் அலகு
அழகல்ல அழகல்ல
நீ உன் குட்டி கீச்சாங்களுக்கு
இறை அளிக்கும் போது அது பேரழகு..!!
கீச்சுகளை அள்ளிவிட்டு பறந்தோடி
காற்றோடு திரியும்
நீ
தேசம் கடந்த தேசாந்திரி ..!!