வ.கார்த்திக் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வ.கார்த்திக்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  394
புள்ளி:  51

என்னைப் பற்றி...

சதுமறை சற்றறியேன்;
சகருவம் தான் வேண்டேன்
மூதறிவு படைத்திலேன்;
முத்தமிழும் கற்றிலேன்

கடுகளவும் கவியறியேன்;
கடுநடை யான் சொல்லேன்
மந்தி, மனம்சொல்லும் ;
பித்துரை என்செய்வேன்

வன்மொழி யாதிருப்பினும்
வசைப்பா யாதிருப்பினும்
பித்தன் உளரலேன;நீவிர்
பிழை பொறுப்பீர்
பின்னேந்தன் அவையடக்கம் தான் ஏற்பீர்

என் படைப்புகள்
வ.கார்த்திக் செய்திகள்
வ.கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 5:36 pm

நின்னை நெருங்கி அணைத்திட வந்தேன்; இனி
நிகர்புத கவிகள் இயற்றிட வந்தேன்
என்னைத் தழுவி வரமொன்று தாராய்: தனி
எழிலே! கன்னித் தமிழே!

உன்னை நிகர்த்த மொழிகளும் உளவோ; உனை
உரைத்திட புலவர் நெடுமொழி எனவோ
அன்னைத் தமிழென முழங்கினர் பலவோ;அதை
அடியுறை அமைந்திட தொழவோ

சிந்தைவழி சேர்ந்தாள சீரோடு வருவாய்; யான்
செப்புமொழி யாவையுமே சிறந்துயர அருள்வாய்
வெற்பினுயர் நின்றிடாது வீசேற தருவாய்; பொருள்
பொற்புடை கவி யனைத்தும்

தஞ்சம் புகவந்தேன் தழுவாயோ மொழிமகளே
விஞ்சும் கனவுநிலை விளங்காயோ கனிவாயோ
நெஞ்சமெலாம் நீயிருக்க நிலையேதும் கூறாயோ
வஞ்சியாது வரம் தாராயோ

மேலும்

அருமை.. 04-Feb-2019 12:55 pm
வ.கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 5:30 pm

அங்கம் சிலிர்க்கும், நல்ல
அதிகாலைப் பொழுதில்
அல்லி இதழ்விரிக்கும், பின்
அசைந்தாடி மணம்பரப்பும்
அசுணம் கண்விழிக்கும், அங்கு
கின்னரம் பண்பாடும்

தேகம் மயங்க, இளைய
தென்றல் வீசிடும்
தாழை தலையசைக்கும், அழகு
தாமரை தான்சிரிக்கும்
தேன்போல இனித்திருக்கும், மனம்
தெவிட்டாத இவ்வழகு

வாசமலர் மணம்கண்டு, சின்ன
வண்டுகள் பறந்துவரும்
வண்ணமலர் நிறம்கண்டு, அந்த
வானவில்லும் மனம் மயங்கும்
வாழ்கை இதுதானென்று, உடல்
வாடும்வரை மலர் சிரிக்கும்

போகும் இடமெல்லாம், எழில்
பொன்வண்ண மகரந்தம்
காணும் இடமெல்லாம், பொழில்
கவின்மிகு மலரங்கம்
கண்கொண்டு பார்த்தாலோ, எனக்கு
காலநேரம

மேலும்

பாவம்பல நாம் செய்து, இந்த பட்சிகளை விரட்டுகின்றோம் படைத்தவன் இருந்துமென்ன, இப்படி பாவச்செயல் நடக்குதடா பாவிகளே ! இனியேனும் காடழிக்கும் பாதகத்தை செய்யாதீர் காடுகளை அழிப்பதனால், என்றும் கவலைகள் உனக்குத்தான் இயற்கை அன்னை இறப்பதனால்,இங்கே இழப்பெல்லாம் நமக்குத்தான் இப்படியோர் கொடுஞ்செயலை, இனியேனும் செய்யாதீர் ! பசுமையை கொய்யாதீர் ! unmayana varigal ............ 04-Feb-2019 1:08 pm
வ.கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 5:28 pm

மாற்றான் பாதங்களுக்கு மலர் தூவியே
போற்றா திருந்தோம் புகழ் வாழ்வையே
ஈற்றால் வரும் பேற்றை எண்ணிடாமலே
ஆற்றார் புறக்கணித்து அறம் இழப்பதோ

பற்றார் பழியுற பயம் கொண்டே
சுற்றார் இகழ்ந்திட பகை கொண்டே
கற்றார் கடிந்திட கலி கொண்டே
நற்றேதும் புரிந்திளீர் நுளை யுற்றீர்

கூற்றான் வருங்காலை குமைந்திடுவோம் நிதம்
ஆற்றா மனத்துயரில் அகப்படுவோம்
உற்றார், தூற்றத் துடிபட மிதிபடுவோம்
ஏற்ற ஊழ்வினை முந்துறவே மடிந்திடுவோம்

நாற்ற நல்லுடல் நலமழுக, அழனமென
சாற்றிடுவோம் சதைத் தீயில் ஏற்றிடுவோம்
காற்றோடு அலைந்திட கலந்திடுவோம், இகம்
வீற்றாது பேயெனத் திரிந் திடுவோம்

மாற்றவியலா மாயப் பிறப்பத

மேலும்

அருமை.. 12-Feb-2019 3:29 pm
வ.கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2019 11:37 pm

யாது படைத்தாய் நெஞ்சே – உனை
யாரும் முழுதாய் உணராதிருக்க
தீது தீக்குறி எல்லாம் – நின்னை
திணுக்குற, பிழைத்திடல் கண்டேன்
மோதும் ஊழ்வினைத் தானும் – உனில்
மூளாது செய்திடல் வேணும்
ஓதும் நின் அறிவுரைக்கே – உளம்
ஒத்திசைக்க, திடம் காணும்

காரென இருண்ட நெஞ்சம் – பலர்
காட்டிட கவலை யுற்றேன்
கடிதென திரண்ட வஞ்சம் – உயிர்
துடித்திட மருட்சி யுற்றேன்
கூரென பிறந்த சொல்லால் – உனை
குத்திக் கிழித்திடக் கண்டேன்
“ பாரடா ” என நீயும் – பக்குவம்
கொண்டிட, மானுடம் வென்றேன்

சீரென சிந்தை கொண்டு – நெஞ்சம்
சிரித்திட அன்பு செய்வார்
பாரினில் பல்லோர் உளரே – இறைவன்
படைத்திட்டான் நீயொக்

மேலும்

சீரென சிந்தை கொண்டு – நெஞ்சம் சிரித்திட அன்பு செய்வார் பாரினில் பல்லோர் உளரே – இறைவன் படைத்திட்டான் நீயொக்க பலரே ஆரென அறிந்திடும் முன்பே – சிலர் அமிழ்தென அறவுரை சொன்னார் பேருளம் பெற்ற மாந்தர் – நின்போல் பெற்றியன், கேளாய் நெஞ்சே அருமையான வரிகள் ... 18-Jan-2019 12:09 pm
அருமை 05-Jan-2019 1:45 am
வ.கார்த்திக் - வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2018 10:47 pm

அன்பாய் எந்தன் விடல்கள் பிணைத்த
அத்தனை நொடியும் கசக்கும் நிலையேன்
அவளை மறக்க நிலையுமின்றி யான்
அலைந்து திரியும் மனமும் இனியேன்

ஒன்றாய்ச் சுழன்ற நாட்கள் எல்லாம்
உணர்வாய்க் கலந்து நினைவை சுடுதே
ஒருமுறை மீண்டும் வாழ்ந்து பார்க்க
புதிராய் மனமும் விதைகள் இடுதே

விதிதான் இதுவென ஏற்கத் துணிந்தால்
விரும்பிய இதயம் வலியும் பெறுதே
சரிதான் போகட்டும் என்று சொல்ல
சற்று மனமும் முரண்படும் இதுயேன்

கண்ணீர் ஆயிரம் கடலாய் ஓடியும்
காதல் காயம் கரைய மறுக்குதே
கடவுள் வந்து கேட்கும் பொழுதிலும்
காதல் வேண்டும் என்றே சொல்லுதே

மேலும்

சரி செய்கிறேன் தோழி 28-Dec-2018 8:02 pm
நீங்கள் சற்றே மிகைப்படுத்தி ஒற்றளபடையில் கூறியுள்ளீர்கள் என்று புரிகிறது. ... 25-Dec-2018 11:39 am
அருமையான வலி மிகுந்த பதிவு...சற்று மனமும் என்ற வரியில் எழுத்து பிழை உள்ளது சரி செய்யவும்.... 25-Dec-2018 6:02 am
வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) ileval5b6d527438b7b மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Dec-2018 8:44 pm

அல்லிடைக் காத்த எனதாருயிர் நண்பா...! யான்
சொல்லிடத் தகுமோ...! நின் சோதிமிக்க நட்பதனை;
உள்ளிடைக் கொண்ட உணர்வெல்லாம், எந்தன்
ஊனிடைக் கலந்து உயிராய் நிற்பதன்ரோ...!

புல்லிடைப் பிறக்கின்ற பனித்துளியும் பெரிதாமோ
பூவிடைப் பிறக்கின்ற தேன்துளியும் பெரிதாமோ
கல்லிடைப் பிறக்கின்ற நீர்த்துளியும் பெரிதாமோ
நம்மிடைப் பிறக்கின்ற நட்பன்ரோ பெரிதினும்பெரிது

மண்ணிடைப் பிறந்த உயிரெல்லாம், உந்தன்
மாதகு நட்பினைப் பெற்றிடுமோ; எந்தன்
கண்ணிடைக் கலந்த கருமணியோ...! நீஎன்
கவியிடைக் கலந்த தமிழ் மொழியோ...!

பண்ணிடைப் பிறந்த இசைகூட, உந்தன்
பாசமொ

மேலும்

azhagana varthakalil ... natpu therikkirathu ..arumai 25-Dec-2018 10:02 am
நன்றி 24-Dec-2018 10:28 pm
மிக அழகான வார்த்தை பிரயோகம் 22-Dec-2018 12:11 pm
நன்றி பிரியா 21-Dec-2018 9:28 pm
வ.கார்த்திக் - வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2018 3:05 pm

“மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கியது தான் மக்களாட்சி ”
சற்று பழக்கப்பட்ட வாசகம்தான் .
“மாக்களால் மக்களுக்காக மாக்களே நடத்துவுது”
சற்று பழகவேண்டிய வாசகம் .

தன்னைத் தானே மறந்துபோன மனிதா, உந்தன்
தன்மானம் விற்கவும் துணிந்தாயோ ...?
முன்னை வாழ்ந்த அரசியல் தலைவர்கள்
மூச்சின் கனலை அறியாயோ ...?
அரசியல் சாக்கடைப் புழுக்களாய் நீயும்
அலைந்து திரிய நினைத்தாயா ...?
மனிதஇனத்தின் மகத்துவம் மறந்து
மடையர்களாகத் திரிந்தாயா ...?
தீரம்;வீரம்;வாதம்; மறந்தே நிதம்
தீவிரவாதம் வளர்த்தாயா ...?
தகுதியில்லாத் தலைவர்கள் புகழை
தரணியெங்கும் உரைத்தாயா ...?

தன்பெண்டு தன்பிள்ளை சீரழிய நீயும்

மேலும்

தன்பெண்டு தன்பிள்ளை சீரழிய நீயும் தலைவா தலைவா என பாரெங்கும் முரசை அறைந்தாயா...? விடைசொல் ... வீணாய் வீழ்ந்துகிடக்கும் மனிதனே விடைசொல்... அருமை...உண்மையான வரிகள்....மனிதனிடம் எந்த கேள்விக்கும் விடை இல்லை.. 24-Dec-2018 12:31 pm
நன்றி தோழி 12-Dec-2018 6:54 pm
அருமையாக உள்ளது..உங்கள் வரிகளில் கோப தணல் சுட்டெரிக்கிறது ......உண்மையான வரிகள் .... 12-Dec-2018 3:39 pm
வ.கார்த்திக் - வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2018 10:37 pm

உனக்காய் நானும் எனக்காய் நீயும்
இருந்தால் போதும் இதயம் வாழும்
நீயும் சென்றாய் நினைவைச் சுமந்தேன்
நிகழும் தருணம் எனையே மறந்தேன்
எனக்காய்ப் பிறந்தாய் எழிலாய் மலர்ந்தாய்
இருந்தும் ஏனோ பிரிவைக் கொடுத்தாய்

ஆழிப்பேரலை வந்தாலென்ன
அகிலம் தீயில் வெந்தாலென்ன
நாழிகை கடந்து சென்றாலென்ன
நானிலம் என்னைக் கொன்றாலென்ன
ஊனிலும் உயிரிலும் ஒன்றாய்ப்போன
தேனினை மறவேனே; எந்தன்
தேவதை இவள்தானோ

இடைவெளியும் குறையுமென
இவள்விழியும் கரையுமென
எனைத் தேடியே அலையுமென
நிமிடங்களைக் கரைத்தேனே; இவள்
நினைவுகளால் தவித்தேனே

பகல் முழுதும் தனியாக
இவள் நினைவும் துணையாக
துகள் துகளாய் உடைந்தேனே
மன

மேலும்

நன்றி பிரியா 12-Dec-2018 1:53 pm
நன்றி தோழரே 12-Dec-2018 1:52 pm
நன்றாக உள்ளது. 12-Dec-2018 7:28 am
சுடும் மனம் அருமையான தவிப்பின் உச்சம்.......அருமை 12-Dec-2018 5:24 am
வ.கார்த்திக் - பிரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2018 4:48 pm

அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய் 

அது ஒருவர் மீது வந்துவிட்டால் எளிதில் குணமடையாது 
அதற்கு மருந்து காதல் என்னும் ஊசி
அதனை செலுத்திவிட்டால் வாழ்நாள்  முழுவதும் வாழ வேண்டும் 
அப்படி வாழவில்லை எனில் மரணத்தை தழுவ வேண்டும் 
அன்புக்காக ஏங்கி காதலித்து  அந்த காதலை புரியாமல்
ஆணவம்,கோவம் இவற்றால் இழந்து 
கடைசியில் மரணவாசல் செல்ல தேவையா இந்த அன்பு !!!

மேலும்

அருமையான விளக்கம்...நன்றி 28-Nov-2018 6:20 am
முதலில் நல்ல புரிதல் வேண்டும். நாம் செலுத்தும் அன்பு காதலா நட்பா என்ற புரிதல். பிறகு அறிதல் வேண்டும். அன்பு வேறு காதல் வேறு. தேர்ந்துகொண்ட இணையை பற்றிய நிலையை அறிதல் வேண்டும் . பிறகு காதலின் கரத்தில் அளித்திட வேண்டும். 'எண்ணித் துணிக கருமம் பிறகு எண்ணுவம் என்பது இழுக்கு' இது சான்றோர் வாக்கு இதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொண்டால் தோல்வி என்பதே இல்லை. தொடர்ந்து வாழ்ந்திருக்க நமது அனுபவம் மற்றும் முடிவு கைகொடுக்கும். நன்றி நட்பே. அருமை நட்பே 27-Nov-2018 8:42 pm
தங்கள் எண்ணம் சரியே.. 21-Nov-2018 5:24 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் ..ஆனால் சிலர் புரிந்துகொள்ளவில்லை காதல் அன்பை என்று நினைக்கிறன் 21-Nov-2018 4:41 pm
வ.கார்த்திக் - வ.கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2018 2:55 pm

நெடுந்தூரம் விரல்கோர்த்து நடைபோட - எனை
நெருங்காமல் விழியாலே சிறைபோட
கடந்தோடும் நொடியாவும் சுகமாக - அவள்
கலந்தாலே நெஞ்சோடு இதமாக

இதழ்தந்த மொழியாவும் கவியாக - இன்பத்
தமிழ்தந்த சுவையாவும் அவளாக
எனைதந்து மனம்வென்று பதியாக - சங்கத்
தமிழ்கொண்டு இவையாவும் வரியாக

இமைக்காது அவள்தூக்கம் காண்பேனே - மண்ணில்
இவள்போல அழகேது என்பேனே
தமிழ்கூட அவளென்றே சொல்வேனே - கண்ணில்
இருகாட்சி தமிழொன்று அவளிரண்டு என்பேனே

இரவோடு எழில்கொண்ட நிலவோடு - கார்
முகிலோடு மணம்கொண்ட மழையோடு
இணைகூற எதுவுண்டு என்றாலோ - கன்னித்
தமிழுண்டு

மேலும்

நன்றி தோழி... 21-Nov-2018 5:15 pm
இந்த "அவள் " எனது கற்பனையில் பிரசுவித்தவள். தமிழ் சொன்ன அழகியல் அத்தனைக்கும் அவளன்றி வேறேது உவமை. 21-Nov-2018 4:37 pm
தட்டச்சு வேகத்தில் தவறு நிகழ்ந்தது தோழியே. தாங்கள் கூறியது முற்றிலும் சரியே. 21-Nov-2018 4:23 pm
தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா 21-Nov-2018 4:21 pm
வ.கார்த்திக் - வ.கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2018 9:20 pm

பல்லுயிரின் கூட்டமைப்பாய்
பசுமையதன் ஆர்பரிப்பாய்
தொல்லுலகம் கண்டதெல்லாம்
தூய்மையான தேசமன்றோ

நெல்லுறைந்த கழனிகளும்
நீருறைந்த நெடுநிலமும்
அல்லுறைந்த கானகமும்
அதிலுறைந்த தானியமும்

விண்ணுறைந்த கார்முகிலும்
விதையுறைந்த நன்னிலமும்
மண்ணுலகம் கண்டதன்று
மறைந்தழியும் நிலையுமின்று

முன்னை வளர்த்த இயற்கையதை
முழுதாய் கொல்லத் துணிந்தோமே
மண்ணை இன்று மலடாக்கி; பல
மாசுக்குவியலை வளர்த்தோமே

விண்ணை முட்டும் வனமெல்லாம்
வீணாய் வெட்டிக் களைந்தோமே
மண்ணை சுரண்டி நதியெல்லாம்
மறையும் நிலையை கொணர்ந்தோமே
உயிரி

மேலும்

கருத்துரைக்கு நன்றி தோழி...@பிரியா 19-Nov-2018 9:59 pm
அருமை. ..இன்னும் நிறைய எழுதுங்கள். .வாழ்த்துக்கள் 11-Nov-2018 6:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே