மாயப் பிறப்பதனில்

மாற்றான் பாதங்களுக்கு மலர் தூவியே
போற்றா திருந்தோம் புகழ் வாழ்வையே
ஈற்றால் வரும் பேற்றை எண்ணிடாமலே
ஆற்றார் புறக்கணித்து அறம் இழப்பதோ

பற்றார் பழியுற பயம் கொண்டே
சுற்றார் இகழ்ந்திட பகை கொண்டே
கற்றார் கடிந்திட கலி கொண்டே
நற்றேதும் புரிந்திளீர் நுளை யுற்றீர்

கூற்றான் வருங்காலை குமைந்திடுவோம் நிதம்
ஆற்றா மனத்துயரில் அகப்படுவோம்
உற்றார், தூற்றத் துடிபட மிதிபடுவோம்
ஏற்ற ஊழ்வினை முந்துறவே மடிந்திடுவோம்

நாற்ற நல்லுடல் நலமழுக, அழனமென
சாற்றிடுவோம் சதைத் தீயில் ஏற்றிடுவோம்
காற்றோடு அலைந்திட கலந்திடுவோம், இகம்
வீற்றாது பேயெனத் திரிந் திடுவோம்

மாற்றவியலா மாயப் பிறப்பதனில், நீவீர்
தோற்றிடாது, சிற்ற றமேனும் ஆற்றிடுவீர்
சிந்தை முழுதும் இதை ஏற்றிடுவீர்
விந்தை வாழ்வதனை மாற்றிடுவீர்.

எழுதியவர் : வேத்தகன் (19-Jan-19, 5:28 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 49

மேலே