என்று தணியுமிந்த அரசியல் அவலம்

“மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கியது தான் மக்களாட்சி ”
சற்று பழக்கப்பட்ட வாசகம்தான் .
“மாக்களால் மக்களுக்காக மாக்களே நடத்துவுது”
சற்று பழகவேண்டிய வாசகம் .

தன்னைத் தானே மறந்துபோன மனிதா, உந்தன்
தன்மானம் விற்கவும் துணிந்தாயோ ...?
முன்னை வாழ்ந்த அரசியல் தலைவர்கள்
மூச்சின் கனலை அறியாயோ ...?
அரசியல் சாக்கடைப் புழுக்களாய் நீயும்
அலைந்து திரிய நினைத்தாயா ...?
மனிதஇனத்தின் மகத்துவம் மறந்து
மடையர்களாகத் திரிந்தாயா ...?
தீரம்;வீரம்;வாதம்; மறந்தே நிதம்
தீவிரவாதம் வளர்த்தாயா ...?
தகுதியில்லாத் தலைவர்கள் புகழை
தரணியெங்கும் உரைத்தாயா ...?

தன்பெண்டு தன்பிள்ளை சீரழிய நீயும்
தலைவா தலைவா என
பாரெங்கும் முரசை அறைந்தாயா...?
விடைசொல் ...
வீணாய் வீழ்ந்துகிடக்கும் மனிதனே விடைசொல்...

எழுதியவர் : வேத்தகன் (12-Dec-18, 3:05 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 151

மேலே