இமைகளாவோம்…

மங்கைகள் எல்லாம் கங்கைகள் அல்ல
கண்டவர் எல்லாம் கை வைத்திட
சங்கையாய் பார்த்திட வேண்டியவர்கள்

காதல் செய்து தாவிச் செல்ல
கன்னியர் ஒன்றும் கவிதைகள் அல்ல
என்றும் நெஞ்சில் சுமக்கும் வரிகள்

பெண்கள் அவர்கள் எம் கண்கள்
பாதுகாக்கும் இமைகளே ஆண்கள்
சிதைக்கும் காடையர்கள் அல்ல

எழுதியவர் : அஹமத் நஸீப் (28-Sep-17, 6:02 pm)
பார்வை : 71

மேலே