சில நேரங்களில் சில மனிதர்கள்

தர்மம் என்று என்னிடம் ஒருவர் வரும்போது
சட்டை பையை தொட்டுப் பார்த்து விட்டு சில்லறை இல்லை என்று சொல்லும் ஒரு மனிதன்
பேருந்து கூட்ட நெரிசலிலும் மற்றவர் என்னை இடிக்க கூடாது
என்று சொல்லும் ஒரு மனிதன்
சாலையில் விபத்து ஓடிச் சென்று பார்த்து விட்டு
ஐயோ பவம் என்று நகரும் ஒரு மனிதன
அடுத்தவர் குடும்பச் சண்டை ஆரவாரமாய் மற்றவரிடம் சொல்லும் ஒரு மனிதன்
கோவில் உள்ளே அர்ச்சனை தட்டில் நுர்று ரூபாய் பேர்டுபவர்
வெளியே தர்ம தட்டில் போட ஒரு ரூபாய் தேடும் ஒரு மனிதன்
அடுத்தவர்க்கு என்னவனால் என்ன நான் நன்றாய் இருக்கிறேன் என்று நினைக்கும் ஒரு மனிதன்
பணம் இருந்தால் பணக்காராய் இருக்கலாம்
நல்ல மனம் இருந்தால் நல்மனிதர்களாய் இருக்கலாம்