பெண்ணின் பார்வையில்

பெண்ணின் பார்வையில்

தாய் என்பவள் சொர்கத்தை அருகாமையில் உணரவைக்கும் தேவதை

தந்தை என்பவர் தன் வாழ்க்கையில் கிடைத்த முதல் உற்ற நண்பன்

சகோதரன் என்பவன் தன்னை அரணாய் காத்திடும் அன்பு போராளி

சகோதரி என்பவள் தன்னில் பாதியாகி தன்னையே விட்டுக்கொடுக்கும் அழகு பூவை

தோழி என்பவள் வலக்கரமாய் உறுவெடுக்கும் அதிசய பிறவி

தோழன் என்பவன் காமம் கலக்கா காதலை அள்ளி தருபவன்

கணவன் என்பவன் காதலையும் காமத்தையும் புனிதமாக்கும் வல்லவன்

மகள் என்பவள் குட்டி நட்சத்திரமாய் தோன்றி தேயா நிலவாய் மாறும் அற்புதம்

மகன் என்பவன் அன்பின் உற்றாய் தோன்றி அழியா ஒளியானவன்

இவற்றில் ஒருவர் குணமாறினாலும்
கண்கள் குளமாகுமே அன்றி
தன் மனம் மாறாது
தன்னலம் இருக்காது
தன் மணம் மாறாது
தன்மானமும் குறையாது

எழுதியவர் : ஷாகிரா பானு (28-Sep-17, 3:52 pm)
Tanglish : pennin paarvaiyil
பார்வை : 146

மேலே