நம்பிக்கை எனும் நூல்

சில நொடிகளில் துவண்டு போவாய்
பல நேரங்களில் போராடி சோர்வாய்
சில தருணங்களில் தாழ்ந்து போவாய்
பல கணங்களில் மிரண்டு ஒலிவாய்..

இனியும் முடியாது என்ற எண்ணம் வரும் பொழுது
நம்பிக்கை என்னும் நூலில் கோர்க்கப்படுவாய்..
உனையறியாமல் தடைகள் உடைத்து முன்னேறி செல்வாய்
வெற்றி கோப்பையை வெல்வாய்...

பின் ஒரு நாள் சிந்திப்பாய்
ஊசி என்னும் வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் நூல் கோர்க்கும் பொழுது
வாழ்க்கை எவ்வளவு பிரகாசமாய் ஒளிர்கிறது
அல்லவா..?
.
.
.

ஆம் என்று உன் உள்மனது நெகிழ்கிறதய் உணர்ந்து
அளவில்லா ஆனந்தத்துடன் மகிழ்ந்து களிகூருவாய்...

:-)

ஆம் நண்பர்களே,

நம் வாழ்க்கை நம் கையில்
நம்மை தவிர வேறு எவராலும்
அதை சிறப்பாக விளையாட முடியாது...

விழுவோம் எழுவோம் போராடுவோம்
பின் நோக்காமல் முன் செல்வோம்...
வெற்றி கோப்பையை வெல்வோம்...

முடியாது என்ற நம்பிக்கை நம்மில் உள்ளதெனில்
முடியும் என்ற நம்பிக்கையும் நம்முள் உண்டு...

நம்முள் உறங்கும் அந்த நம்பிக்கை நூலை தேடி
நம் வாழ்க்கை எனும் ஊசியில் கோர்த்து
வெற்றி எனும் கனியை ருசித்து வாழ்வோம்...

- நம்பிக்கை -

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (28-Sep-17, 6:31 pm)
பார்வை : 208

மேலே