நீ வெல்வாய்

தோல்விகண்டு தொய்வடைவது
தோற்றதில் முதல் தோல்வி
தோல்விக்கே தோல் கொடு
தொலைவிற்கது ஓடிவிடும்

விழுந்ததை நினைத்து வருந்தாதே
எழுவதை மட்டும் எண்ணத்தில் கொள்
அழுவது உன்னை அடங்கச் செய்யும்
எழுவது உன்னை ஆளச் செய்யும்

முற்தரைகளையும் புற்தரைகளாகப் பார்
முன்னே வெற்றிகள் முடிசூடும்
இருட்டென எண்ணி ஒழிந்திடதே
குருடர்களை ஒரு முறை மனதிற்கொள்

பயமென்ற அப் பீதி
எப் படைக்கும் படு தோல்வி
முடியும் எனும் அம் முயற்சி
முப்பொழுதும் உன் எழுச்சி

தோல்வி கண்டு தயங்காதே
மனமுடைந்து வருந்தாதே
குதித்தெழு குதிரையாய்
ஓடிச் செல் நீ வெல்வாய்

எழுதியவர் : அஹமத் நஸீப் (1-Oct-17, 11:07 am)
பார்வை : 241

மேலே