எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

//வெண்பா எனும்பா மிகவும் எளிதுதான் 

  நண்பா பயின்றிட வா ! // 

வணக்கம் ! 

வெண்பா ! இந்த வார்த்தை தமிழ் அகராதியில் ஒரு மூலையில் இருக்கும் வார்த்தை ஆனால் தமிழ்க் கவிதை உலகத்தில் முன்னொரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது இந்த வெண்பா தான் ! இப்பொழுது புதுக்கவிதைகளின் உதயத்தினால் அருகி வருகின்றது ! வெகுசிலரே இந்த யாப்பு வடிவத்தைப் பின்பற்றிக் கவிதைகள் எழுதி வருகின்றனர் ! அவர்களது பட்டியலைச் சற்று விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் பயிலரங்கம் ! இதென்ன பயிலரங்கம் என்று நீங்கள் கேட்கலாம் மரபுக் கவிதையின் உறுப்புகள் சொல்லிக் கொடுத்து மரபுக் கவிதையின் அழகியான வெண்பாவை எழுத வைப்பதிந்தப் பயிலரங்கம் ! இதனை முகநூலில் துவங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டு அன்று செயல்படுத்த உள்ளோம் மரபுக் கவிதை கற்க ஆவல் இருப்பவர்கள் கயல் பயிலரங்கத்தை முகநூலில் உடனே விருப்பம் இட்டு மேலும் kayalvenba .blogspot .com  என்ற இணையதளத்தில் இணைந்து தங்கள் மரபுப் பயிற்சியைத் துவங்க அழைக்கின்றேன் ! 

முகநூலில் விருப்பமிட 
www .facebook .com /kayalvenba  

இணையத்தில் தொடர 
www . kayalvenba .blogspot .com 

மேலும் தகவலுக்கு 
kayalvenba @gmail .com 

கவிஞர்கள் ஆதரவளிக்கக் கோருகின்றேன் ! 

நன்றி 
விவேக்பாரதி 

மேலும்

முதன் முதலாக முறுக்கிய மீசை......

மேலும்

நான்பார்த்த சாரதிக்கும் நான்பார்த்த பாரதிக்கும் வான்பார்த்த மீசைக்கு வாழ்த்து 22-Oct-2015 4:43 pmசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு

ஒரு ஆனந்தக் களிப்புப் பாடல்

வந்திடு வீர்வரு வீரே - நலம்
தந்திடும் யோகம் தான்செய்யு வீரே

கைகளைக் கால்களை நீட்டி - உடல்
கவினுற வேதான் கலைகளுங் காட்டி
வைகறை செய்வது யோகம் - இதை
வந்தனை செய்தால் வாராது சோகம் !

பொய்களை யாக்கையில் நீக்கி - வெறும்
பொல்லாமை தன்னை மனத்தினில் போக்கி
செய்கையைச் செய்வது யோகம் - இதைச்
செய்பவர் வாழ்வினில் இன்பம்முப் போகம் !

சக்கரம் உள்ளது ஏழு - அதை
சரியில்நி றுத்த யோகத்தில் வாழு
அக்கறை கொண்டவன் சொன்னேன் - இதை
அவசியம் கேட்பாய் என்செல்லக் கண்ணே !

முக்திநி லைகாண வேண்டில் - சொலும்
முதுநெறி யோகம் யாண்டுமே வேண்டும்
சிக்கிய சேதிக ளெல்லாம் - கவிச்
சிறுவனும் சொன்னேன் யோகத்தால் வெல்வோம் !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி​

மேலும்

மிக்க நன்றி 21-Jun-2015 5:43 pm
பாடல் சிறப்பு... 21-Jun-2015 11:38 am

அன்பு பாவலர் மார்களே...வணக்கம்...

சில தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் கன்னியப்பன் தாத்தா இட்டிருந்த பதிவினைப் பார்த்தேன் "சட்கோண பந்தம்" குறித்து பதிவு செய்திருந்தார். அதிலே அவர் பதிவேற்றியிருந்த படத்திற்கான கவிதை வடிவினைக் கேட்டார்..பின்பு அவரே கண்டறிந்து பதிவும் செய்தார். வெண்பா எழுதத் தெரிந்த அணைத்து புலவர்களும் மிகவும் சுலபமாக "சட்கோண பந்தம்" எழுதலாம். இதோ இலக்கணங்கள் தருகிறேன் கூடவே நான் இட்டிருக்கும் படத்தில் உள்ளவாறு வார்த்தைகளை அடுக்கினால் "சட்கோண பந்தம்" தயார்..

இதோ இலக்கணங்கள்...

1) வெண்பாவின் தளைகள் ஏதும் தட்டாமல் ஓசை நயம் மாறாது அமைதல் வேண்டும்.
2) 2-4-6-8-10-12 ஆகி (...)

மேலும்

எனது முதல் COLLAGE

வள்ளுவன்; கம்பனொடு; பாரதியும்; தாசனும்;
தெள்ளுதமிழ் கண்ணதாசன்; வாலியும்; வைரமுத்தும்
நன்நாமுத் துக்குமார்; தாமரையும் கார்க்கியும்
நன்றாய்க் கபிலனையும் பார் !

-விவேக்பாரதி

மேலும்

ஹ்ம்ம் அருமை 26-Jan-2015 5:07 pm
கொலாஜில் நான் விவேக்பாரதியைத் தேடினேன் ------அன்புடன், கவின் சாரலன் 26-Jan-2015 4:44 pm
மிக்க நன்றி 26-Jan-2015 4:05 pm
மன்னிக்கவும் நட்பே திருத்தி மாற்றிவிட்டேன்.... 26-Jan-2015 4:03 pm

பூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன் தங்கள் முன்னால். துபாய் தமிழர்சங்கம் நடாத்திய "இது ஒரு கவிக்காலம்" என்னும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் என்னும் முத்தன இடத்தை வென்றுள்ளேன். ஏதும் அறியாத இந்தச் சின்னப் பயலுக்கு முதல் பரிசாகக் 4 கிராம் தங்கக் காசுகள் கொடுத்ததோடு அல்லாமல் "வித்தக இளங்கவி" என்னும் பட்டம் வேறு வழங்கிஉள்ளது. :) எனக்கு இத்தகு பெரும் அங்கீகாரத்தை வழங்கிய துபாய் தமிழர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிப் பூக்களை உதிர்க்கிறேன். என்னை இவ்வளவு உயர்த்திய மாஞ்சா நூற்களான எனது ஆசான்களையும் பாதம் பணிந்து போற்றுகிறேன்.

-விவேக்பாரத (...)

மேலும்

நன்றி வெண்பா வேந்தே ! வாழ்க வளமுடன் ! 22-Jan-2015 11:33 am
நன்றி ! வாழ்க வளமுடன் ! 22-Jan-2015 11:31 am
மணிமகுடம் தந்தார் துபாய்த்தமிழ் சங்கம் அணியதற்கு உங்களது வாழ்த்து ! 21-Jan-2015 10:22 pm

அம்மாவும் நானும்

அம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே
---ஆனந்தம் ததும்பிடவே நிற்கின் றேனே
சும்மாநான் விளையாட்டாய் எடுக்கச் சொன்ன
---சுமாரான புகைப்படத்தின் எழிலைப் பாரீர்
அம்மாடி நானுமிதை நம்ப வில்லை
---அப்படியோர் அழகுஇந்த புகைப்ப டத்தில்
எம்மாதா பராசக்தி இதுபோல் என்றும்
---எப்போதும் இருந்திடவே அருளைத் தாராய் !

-விவேக்பாரதி

மேலும்

படமும் கவியும் அருமை . இதே சந்தோசம் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 12-Jan-2015 3:20 pm
விஷேஸ் 11-Jan-2015 10:50 pm
இதே அன்புடன் சந்தோசத்துடன் வாழ்க தோழா, வாழ்த்துக்கள். 11-Jan-2015 6:51 pm
அன்பின் அழகை மிஞ்சுமோ.வேறெதுவும் .... இதே அன்பு இதே அணைப்பு தினந்தோறும் நிலைக்க வாழ்த்துக்களோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன் .... 11-Jan-2015 3:35 pm

கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா
---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி என்ற
கவிராஜன் அவன்புகழை பாடி யேதான்
---கஷ்டங்கள் மறந்துவிடு பேதை நெஞ்சே !

மேலும்

கவலைகள் மறக்க அதுவே அற்புதமான வழி.. அருமை.. 17-Dec-2014 10:45 pm
அருமை அருமை மிகவும் அருமை 17-Dec-2014 10:11 pm

மலைக்கோட்டை உச்சியில் நிற்கின்றேன் நானும்
நிலையாக நல்லருள் சாற்றும் - சிலைவடிவத்
தேவன் விநாயகன் பார்வை கிடைத்ததே !
மேவ வருமோ பழி !

மேலும்

அதேதான் நானும் சொல்கிறேன் அம்மா. கணபதி அருளிருக்க வாராது பழி! கருத்திற்கு நன்றி 21-Nov-2014 10:27 pm
இறைவனது பார்வை பட்டால் அருள் அல்லவா கிட்டும். பழி எப்படி சேரும்?? 20-Nov-2014 8:31 pm
மிக்க நன்றி 20-Nov-2014 7:23 pm
கண்டிப்பாக பழிவராது புகழ் தான் வரும். வாழ்த்துக்கள் பாரதி. 16-Nov-2014 2:40 pm

எனதண்ணன் அபியின் சிறப்பான வாழ்த்துக் கவிதை நேரான பார்வைக்கு

மேலும்

கவிதையும் அபியின் கலைனயமுள்ள கையெழுத்தும் அருமை 15-Nov-2014 7:06 am
அன்பான கவிதைஅண்ணனின் பிறந்தநாள் வாழ்த்தாக தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்று நன்று 14-Nov-2014 11:17 pm
மேலும்...

மேலே