எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு ஆனந்தக் களிப்புப்...



சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு

ஒரு ஆனந்தக் களிப்புப் பாடல்

வந்திடு வீர்வரு வீரே - நலம்
தந்திடும் யோகம் தான்செய்யு வீரே

கைகளைக் கால்களை நீட்டி - உடல்
கவினுற வேதான் கலைகளுங் காட்டி
வைகறை செய்வது யோகம் - இதை
வந்தனை செய்தால் வாராது சோகம் !

பொய்களை யாக்கையில் நீக்கி - வெறும்
பொல்லாமை தன்னை மனத்தினில் போக்கி
செய்கையைச் செய்வது யோகம் - இதைச்
செய்பவர் வாழ்வினில் இன்பம்முப் போகம் !

சக்கரம் உள்ளது ஏழு - அதை
சரியில்நி றுத்த யோகத்தில் வாழு
அக்கறை கொண்டவன் சொன்னேன் - இதை
அவசியம் கேட்பாய் என்செல்லக் கண்ணே !

முக்திநி லைகாண வேண்டில் - சொலும்
முதுநெறி யோகம் யாண்டுமே வேண்டும்
சிக்கிய சேதிக ளெல்லாம் - கவிச்
சிறுவனும் சொன்னேன் யோகத்தால் வெல்வோம் !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி​

நாள் : 20-Jun-15, 10:03 pm

மேலே